கென்யாவில் அரசியலில் குழப்பமாம் !
கென்யா நாட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் அதிபர் தேர்தல் இடம்பெற்று இத் தேர்தலில் அதிபர் உஹூரு கென்யட்டா வெற்றி பெற்றார். ஆனால் அத் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாக கூறி, உஹூரு கென்யட்டா வெற்றி பெற்றது செல்லுபடியாகாதென மேல் நீதிமன்றம் தெரிவித்ததனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று (26-ந் திகதி) மறு தேர்தல் இடம் பெறுமென தெரிவிக்க ப்பெற்றறது. இருப்பினும் இத்தே ர்தலை புறக்கணிக்கப்போவதாக எதி ர்க்கட்சி தலைவர் ரைலா ஒடிங்கா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இத் தேர்தலுக்கான ஆயத்த வேலைகளை தேர்தல் வாரியம் சரியாக செய்து முடிக்கவில்லையென்பதால் தேர்தலை இப்போது நடத்தாமல் தாமதப்படுத்த வேண்டுமென மனித உரிமைகள் ஆர்வலர் கெலிப் கலிபா என்ப வர் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
வழக்கை மேல் நீதிமன்றம் நேற்று விசாரிக்க தயாரானபோது, மேல் நீதிமன்ற த்திற்கு காவல் துறையினர் திடீரென ‘சீல்’ வைத்தனர். மேல் நீதிமன்றம் அமை ந்துள்ள சாலையில் யாரும் நுழைய முடியாதபடிக்கு தடுப்பு வேலிகளை காவல் துறையினர் அமைத்துள்ளனர்.
அங்கு கலவர தடுப்பு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








