Breaking News

மனித உரிமை ஆணையாளரின் யோசனைகளை இலங்கை ஏற்றுகொண்டதால் சிக்கல்


மனித உரிமை ஆணையாளரின் யோசனைகளை இலங்கை ஏற்றுக்கொண்டதினால் பல சர்வதேச நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதை தவிர்த்துள்ளதாக இலங்கையர்களுக்கான சர்வதேச அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமை ஆணைக்குழுவில் பங்கு கொண்டு நேற்றைய தினம் நாடு திரும்பிய குறித்த அமைப்பின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு இதனை தெரவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இராணுவ வீரர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர,இலங்கை தொடர்பிலான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார்.

மனித உரிமை ஆணையாளர்செயிட் ராட் அல் ஹூசைனிடம் வழங்கப்பட்டுள்ள பொய்யான அறிக்கையின் அடிப்படையில் விவாதங்கள் இடம்பெற்றன.

இதனை அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் மறுதளிக்காமல் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளதாக சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.