Breaking News

குண்டும், பீரங்கியும் அற்ற யுத்தம் தொடங்கியுள்ளதாக – மனோ

இக் கால செயற்பாட்டில் இரத்தமும், குண்டும் பீரங்கியும் இல்லாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும் காலகட்ட மாக காணப்படுவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  புதிய தேர்தல் முறை சம்பந்தமாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலம ர்வில் கலந்து உரையாற்றும் போதே அமைச்சர் மனோ கணேசன் குறிப்பி ட்டவாறு தெரிவித்துள்ளார். இந் நிகழ்வில் உரையாற்றுகையில் யுத்தம் முடி வுற்ற  நிலையில்  யாவும் அமைதியான பாலும் தேனும் ஓடுவதாக நானோ ரவூப் ஹக்கிமோ தெரிவிக்கப்போவதில்லை. உண்மையில் குண்டும், பீரங்கி யும், இரத்தத்தையும், சதைகளையும் தொலைத்த யுத்தத்தை விட இப்போது நடந்து கொண்டிருக்கும் யுத்தம் அபாயகரமானதென தெரிவித்துள்ளார்.

இப்பாடியான ஒரு சூழலில், சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்தும், அழ வேண்டிய இடத்தில் அழுதும், அழுத்தம் ஏற்படுத்த வேண்டிய இடத்தில் அழு த்தம் கொடுத்தும் எதிர்நீச்சல் நீந்தி  முன் நகர்வதே  எமது  தலையாய கடமை யாக உள்ளது.

தேர்தலில் மாற்றம் தேவையில்லை. பழைய வழியே சிறந்தது. அதில் தான் சிறுபான்மை கட்சிகளுக்கு சரியான பிரதி நிதித்துவமென மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.