வலிகாம இடப்பெயர்வு இருபத்து இரண்டு வருடங்களாகியும் கனக்கும் நினைவலைகள் ! - THAMILKINGDOM வலிகாம இடப்பெயர்வு இருபத்து இரண்டு வருடங்களாகியும் கனக்கும் நினைவலைகள் ! - THAMILKINGDOM

 • Latest News

  வலிகாம இடப்பெயர்வு இருபத்து இரண்டு வருடங்களாகியும் கனக்கும் நினைவலைகள் !

  மீளும் நினைவுகள் என்றும் ரணமாக....

  ஒவ்வொரு அவலத்தின்போதும் இந்த அண்டம் யாவுமே அரூபமாய் நின்று வேடிக்கை பார்த்த கால்கோள் நாள்....! 1995 ஆம் ஆண்டு இதே நாள்...! கந்தசஷ்டி விரதத்தின் கடைசிநாள்......! 

  "அன்பார்ந்த தமிழீழ மக்களே! 

  யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி மிகப்பெரும் இனப்படுகொலையை மேற்கொ ள்ளும் நோக்குடன் ஸ்ரீலங்கா இராணுவம் நம் மண்ணை முற்றுகையிட்டு ள்ளது. 

  ஆகவே கையில் கிடைப்பவற்றை எடுத்து க்கொண்டு பாதுகாப்பான இடம்தேடி தென்மராட்சி மற்றும் வன்னிப்பிரதேசங்க ளுக்கு உடனடியாக இடம் பெயர்ந்து செல்லுமாறு வேண்டப்படுகிறீர்கள்!" 

  மக்களின் இதயங்களில் பாரிய அடியாக விழுந்தது இவ்வறிவிப்பு இராணுவத்தின் ஷெல்வீச்சுகளுக்கு அஞ்சி அவ்வ ப்போது போவதும் பின்னர் வீடு வருவதுமாக சின்னச்சின்ன இடப்பெயர்வு களை மக்கள் அனுபவத்தில் கொண்டிருந்தாலும் ஒரேயடியாக எழும்பிப்போ என்றது அந்த அறிவிப்பு.
  கணப்பொழுதில் எல்லா மனிதரும் கலவரமடைந்து அவசர அவசரமாக கையில் அகப்பட்டதை மட்டும் மூட்டை முடிச்சுக் கட்டினர். அடங்காத ஆழி வாய்ச் சத்தம்போல் ஒரு பொதுவான ஓசை அனைத்து வீடுகளிலிருந்தும் ஒன்றாகி ஓலமிட்டது. 

  "எங்க அம்மா போறம்?  நாங்கள் ஏன் போகோணும்?

  இயக்கம் ஆமியை மறிக்காதோ?" 

  ஏழு வயதுச் சிறுவனாய் அப்போது நான் அம்மாவைக் கேட்டு, அம்மா எதற்குமே பதில்சொல்லாமல் "அண்ணன்ர சையிக்கிள்ள போய் ஏறு" என்று மட்டும் கூறிய அந்தப் பொழுது இன்றும் நெஞ்சிலே பச்சை குத்தியதாக தேங்கிக் கிடக்கின்றது. 

  1994இல் முதலாவது பெண் சனாதிபதியாக தெரிவாகிய சந்திரிகா தமிழ்மக்க ளுக்கு சிறு நம்பிக்கையினைக் கொடுக்கும் முகமாக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றார். 

  ஆனால் 1995 இன் நடுப்பகுதிக்கு முன்னதாக விடுதலைப்புலிகளுக்கும் சந்திராகா அரசுக்குமான பேச்சுவா ர்த்தை தோல்வியில் முடிவடைந்த தைத் தொடர்ந்து தாக்குதல்கள் ஆர ம்பமாகின. 

  அன்றிலிருந்து வடபகுதியை ஏழரைச் சனி ஆட்டிப்படைக்கத் தொடங்கியது. முன்பிருந்த UNP அரசைவிட சந்திரிகா அரசு போரிலும் இன அழிப்பு நடவடிக்கையிலும் முழுமூச்சுடன் செயற்ப டத்தொடங்கியது. 

  அப்போது யாழ் மாநகரம் புலிகளின் வசம் இருந்தது. அதனைக் கைப்பற்று வதற்கு இராணுவம் படாதபாடுபட்டது. பலமுனைத் தாக்குதல்களினைத் தொடுத்தும் அவை புலிகளால் முறியடிக்கப்பட்டவண்ணம் இருந்தன. 

  'முன்னேறிப் பாய்தல்' (Lead Farward) என்ற பெயர்குறித்த தாக்குதலோடு இராணுவம் பாரிய முன்னகர்வை மேற்கொண்டது. இதுவும் மக்களுக்கு சிறிய இடப்பெயர்வைக் கொடுத்தாலும் 'புலிப்பாய்ச்சல்' என்ற பெயர்குறித்த விடு தலைப் புலிகளின் எதிர்ச் சமர் மூலம், படையினர் பழைய நிலைகளுக்கு திருப்பப்பட்டு மக்கள் மீள்குடியேறினர். 

  இக்காலப் பகுதியில்தான் நவாலி புனித பேதுருவானவர் தேவால யத்தி ல் ஸ்ரீலங்கா வான்படையினர் தாக்கு தல் நடத்தியதில் 65 பொதுமக்களை கொல்லப்பட்டும் 200க்கும் மேற்பட்ட வர்கள் படுகாயமடைந்துமிருந்தனர்.

  ஆனாலும் அதே புட்காரா விமான ங்கள் விடுதலைப் புலிகளால் ஓரிரு தினங்களில் சுட்டு வீழ்த்தப்பட்டன. யாழ்ப்பாணத்தில் படையினர் சந்தித்த இப் பின்ன டைவுகள் கொழும்புக்கு அரசியல் ரீதியில் பாரிய நெருக்கடியைக் கொடுத்தது. 

  நிலமை பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு முப்படைகளையும் அணிதிரட்டிய பாரிய படை நடவடிக்கை ஒன்று திட்ட மிடப்பட்டது. 

  அதுதான் ரிவிரெச என்று சிங்களத்தில் அழைக்கப்பட்ட 'சூரியகதிர் இராணுவ நடவடிக்கை'. சூரியகதிர் இம் மாதத்தின் 17ஆம் நாள் பெரும் எடுப்புடன் பலாலி, அளவெட்டி, பொன்னாலை, புத்தூர் போன்ற இடங்களிலிருந்து ஆரம்பிக்க ப்பட்டாலும் ஆரம்பத்தில் புலிகள் மிகப்பலத்த எதிர்ச் சமருடன் நிலைகளைத் தக்கவைத்திருந்தார்கள். 

  படையினரின் முற்றுகைச் சமர்கள் தீவிரமாகிக்கொண்டுபோகவே மக்கள் இடம்பெயெரவேண்டிய தேவை எழுந்தது. அதன் வாயிலாகவே மக்களை இடம் பெயர்ந்து செல்லுமாறு விடுதலைப் புலிகள் அறிவிப்பு விடுத்தனர்.

  இவ்வறிவிப்பு இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டு மக்கள் வலிகாமத்திலி ருந்து முற்றாக வெளியேறியிருந்தாலும் ஒரு மாதத்திற்கும் மேலாக யாழ் நகரைக் கைப்பற்றவதற்கான யுத்தம் நடந்து கொண்டே இருந்தது.

  டிசெம்பர் மாதமளவில் ஈழப் போராட்ட வரலாற்றில் கடைசியாக படையின ரிடம் யாழ்நகரை புலிகள் இழந்தனர். 

  யாழ்ப்பாணத்தின் சனத்தொகை பெரும்பாலும் யாழ்நகருடன் சேர்த்து வலிகா மம் பகுதியிலேயே அதிகமாக இருந்தது. அத்தனை மக்களும் இரவோடிரவாக அன்றைய அகலமற்ற A9 வீதிவழியாக நத்தை வேகத்தில் நகர்ந்தன.

  வழிநெடுகிலும் வயதானவர்களின் சாவும் குழந்தைகளின் சாவும் இடு காடு களை தோற்று வித்தவண்ணமே சென்றன. 

  மாரிகால மழை வெள்ளத்தில் இருட்டிலே அமிழ்ந்துபோன அன்றைய பச்சைக் குழந்தைகளோடு குழந்தையாயிருந்து சாவின் எல்லைவரை சென்று மீண்ட இன்றைய 20 வயதுடைய இளைஞர்களும் யுவதிகளும் அந்த அவலத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை! 

  வலிகாமம் இடப்பெயர்வை அச்சொட்டாக கூறிய பாடல் விடுதலைப் புலி களால் வெளியிட்ட “பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகும் இடம் தெரியா மல்” என்ற பாடல் குறிப்பிடத்தக்கது. 
  திருமலைச் சந்திரனால் பாடப்பட்ட இந்தப் பாடல் சர்வதேச ரீதியில் சிறந்த பத்துப் பாடல்களில் ஒரு பாடலாக தேந்தெடுக்கப்பட்டது.  ”தாயின் மடியினில் ஆசையுடன் தலை சாய்த்து உறங்கிய நேரம் வந்த பேய்கள் கொளுத்திய தீயில் கரைந்தவர் போகும் வழியெலாம் ஈரம் மாடுகள் கூடவா அகதி? 

  தமிழ் மண்ணிலே ஏனிந்த சகதி?” என்ற வரிகள் அன்றைய இடப்பெயர்வு அவ லங்களை எடுத்துரைக்கும் ஆத்ம வரிகளாகும். உணவில்லை, தண்ணீ ரி ல்லை;

  வானத்தின் மீது நம்பிக்கை வைத்து அண்ணாந்து வாய்பிழந்து மழைத்துளி யைப் பருகிய ஞாபகங்கள் இன்றும் அழியவில்லை!

  வானம் மட்டும் எங்களுக்காக அழுது கொண்டிருக்க உலகமோ இருட்டறை க்குள் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தது.

  தூங்கி எழுந்த பின்னர்கூட நடந்தவை யாவும் உறக்கத்தில் கண்ட கனவென்று எமக்கு கற்பிதம் கூறுகின்றது இப்போது!
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: வலிகாம இடப்பெயர்வு இருபத்து இரண்டு வருடங்களாகியும் கனக்கும் நினைவலைகள் ! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top