Breaking News

பாதாளக் குழுவுடன் தொடர்பாம் வடக்கு மாகாணசபை உறுப்பினர் மீது - குற்றச்சாட்டு

பாதாள உல­கக் குழுக்­க­ளு­டன் தொடர்­பு­க­ளைப் பேணி வரும் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் உள்­ளிட்ட இரண்டு அர­சி­யல்வா­தி­கள் தொடர்­பில் விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக தகவல்கள் கசிந்துள்ளன. 

மேல் மாகாண உள்­ளூ­ராட்சி மன்­ற­மொன்­றின் முன்­னாள் உறுப்­பி­னர்  மற்­றும் வடக்கு மாகா­ண­ச­பை­யின் உறுப்­பி­னர் ஆகி­யோர் தொடர்­பா­கவே விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. பாதாள உல­கக் குழுக்­க­ளு­டன் தொடர்பு பேணுவ­தா­க­வும், நாட்­டின் நல்­லி­ணக்­கத்தைச் சீர்­கு­லைக்க முயற்­சிப்­ப­தா­க­வும் இவ் அர­சி­யல்­வா­தி­கள் மீது குற்­றம் சாட்டப்பட்டுள்ளது.  இவ்விரண்டு அர­சி­யல்­வா­தி­கள் தொடர்­பி­லும் திட்­ட­மிட்ட குற்­றச்செயல் தடுப்­புப் பிரி­வி­னர் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.