இலங்கையை பௌத்த, சிங்கள நாடாக மாற்ற முடியாது - முதலமைச்சர்
இலங்கையை பௌத்த நாடாக, சிங்கள நாடாக அடையாளப்படுத்து வதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். சுகயீனம் காரண மாக ஓய்வில் உள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனி டம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடக வியலாளர்கள் எழுத்து மூலம் கோரிய கேள்விகளுக்கு வழங்கிய பதில்களில் தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டபோது வட மாகாணத்தில் குறிப்பிட்ட சில பௌத்த வணக்கஸ்தலங்களை விட வேறெ ங்கும் பௌத்த கோயில்களோ, விகாரைகளோ இல்லையென தெரிவித்து ள்ளார். வடமாகாண முதலமைச்சர், தற்போது இராணுவ அனுசரணையுடன் பௌத்த வணக்கஸ்தலங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு வருவதாகவும் பௌத்தர்கள் இல்லாத இடங்களில் எல்லாம் அவை நிர்மாணிக்கப்பட்டு வரு வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தம் நிறைவடைந்த 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் இது ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற குரல் ஆவேசமாக எழுப்பப்பட்டுள்ளதாக தெரி வித்துள்ளார்.
சரித்திரம் பிழையாக எடுத்துரைக்கப்பட்டு இந்த நாடு ஒரு சிங்கள பௌத்த நாடு என்ற பொய்யான, பிழையான, தவறான கருத்தை முன்வைத்து வருவ தாக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் விசனம் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்தின் போது இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டை ஏற்றுக்கொ ண்ட எம் அரசியல் வாதிகள் அதிகாரம் கிடைத்த உடனேயே தாம் இலங்கையர் என்ற எண்ணத்தைக் கைவிட்டு விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர், மலேயர் என தம்மைப் பிரித்துப்பார்க்கவும் சிந்திக்கவும் தொடங்கி விட்டா ர்கள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் அவர்கள் சட்டங்களைப் பெரும்பான்மையினருக்கு ஏற்ற விதத்திலும் சிறு பான்மையினரைப் புறக்கணிக்கும் விதத்திலும் உருவாக்கியதாக குறிப்பிட்டு ள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளால் 1949 ஆம் ஆண்டில் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், 1956ம் ஆண்டு கொண்டுவந்த “சிங்களம் மட்டும்” சட்டம் தமிழ் அரச அலுவலர்களின் உரித்துக்களைப் பறித்தெடுத்ததாக தெரிவித்துள்ளார்.
தரப்படுத்தல் தமிழ் மாணவர்களின் உயர் கல்வியில் கைவைத்தது என்றும், அரச காணிக் குடியேற்றங்கள் தமிழர் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களை பிற இடங்களில் இருந்து கொண்டு வந்த பெரும்பான்மையினர் பறித்தெடுத்து குடி யிருக்க உதவியதாக நிரூபித்துள்ளார்.
1970ம் ஆண்டளவிலேயே திருகோணமலையைச் சூழ சிங்களக் கிராமங்கள் உருவாகத் தொடங்கின என்றும், பொலிசார் மேலான அதிகாரம் மத்தியின் கைவசம் இருந்ததால் வட கிழக்கு மாகாணங்களில் சிங்களப் பொலிசாரின் ஆதிக்கம் அதிகரித்ததாகவும், அதன்பின்னர் படிப்படியாக இராணுவத்தினரும் அழைக்கப்பட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ் நிலையில்த்தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள் என்றும் தெரிவித்துள்ளார். வட கிழக்கு பௌத்தத்தை வேண்டாம் என்று கை விட்ட ஒரு பிரதேசம் என்று கூறும் வட மாகாண முதலமைச்சர், எனினும் தற்போது அங்கு மீளவும் பௌத்தத்தை அதுவும் அரச உதவியுடன் திணிக்கப் பார்ப்பது வட கிழக்கு மக்களின் மனித உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கை என ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மக்கள் பெரும்பான்மையினர் பௌத்தர்கள் அல்லாதவர்கள் என்ப தையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போதிருக்கும் பௌத்தர்களும் அரச உள்ளீட்டால் அண்மைக் காலங்களில் உள்வாங்கப்பட்டதாக குறிப்பிட்டு ள்ளார்.
இலங்கையைப் பௌத்த நாடென்றோ சிங்கள நாடென்றோ கூறுவதை தான் வலுவாக நிராகரிப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பௌத்தத்தை வேண்டாம் என்று ஒதுக்கிய வட கிழக்கை “பௌத்த நாடு” என்ற அடைமொழியின் கீழ்க் கொண்டு வருவதை கண்டித்துள்ள அவர், ஏனைய ஏழு மாகாணங்களில் பௌத்தர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் அவற்றி ல் பௌத்தத்திற்கு முதலிடம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும் வடக்கு கிழக்கு மாகாணங்களோ சமஷ்டி அடிப்படையில் மதச் சார்ப ற்ற அலகாக உருவாக்கப்பட வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.