Breaking News

தேசிய பிரச்சினைக்கு அடுத்த வருடம் தீர்வு

தீபாவளி நிகழ்வில் பிரதமர் அறிவிப்பு 

சுதந்திர இலங்கையின் 70 வருட பூர்த்தியின்போது புதிய அரசியலமை ப்பின் ஊடாக இனங்களுக்கு இடை யில் பூரண நல்லிணக்கத்தை ஏற்படு த்துவதற்கு எதிர்பார்க்கின்றோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

 புதிய அரசியலமைப்பு பணிகளை வேகமாக செய்துவிட முடியாது. அனைத்து விடய தானங்கள் குறித்தும் ஆராய்ந்து கலந்துரையாடியதன் பின்னரே பிரச்சி னைகளை தீர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

தேசிய தீபாவளி விழா நேற்று அலரிமாளி கையில் நடைபெற்றது. இந்நிக ழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், பல பிரதேசங்களில் இருந்து தேசிய தீபாவளி விழாவிற்கு பெருமளவிலான மக்கள் வருகை தந்துள்ளனர். இல ங்கையில் மாத்திரமின்றி உலகம் பூராகவும் தீபாவளி பண்டிகை கொண்டா டப்படுகின்றது. 

இந்து சமயமானது புராதன காலம் தொட்டு காணப்பட்ட சமயமாகும். தீபாவளி பண்டிகையை இந்துக்கள் மாத்திரமின்றி ஏனைய பல மதத்தவர்களும் கொண்டாடுகின்றனர். இன, மத, மொழி வேறுபாடுகள் இருந்தாலும் அனை வரும் இலங்கையர் என்ற வகையில் சமய வழிபாடுகளில் பங்குபற்றும் சூழல் தற்போது நாட்டில் உருவாகியுள்ளது. 

இலங்கையில் அனைத்து இனங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும். பெளத்த சமயமும் இந்து சமயமும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளன. 

இந்நிலையில் இலங்கையை சமாதானத்துடன் கூடிய நாடாக உருவாக்க வேண்டும். இதன் ஊடாக நாட்டை கட்டியெழுப்ப முடியும். சுதந்திரமான இல ங்கையை பார்க்க முடியும் என்ற நம்பிக்கையில் முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றோம். 

புதிய அரசியலமைப்பினை கொண்டு வரவுள்ளோம். அனைத்து கட்சிகளும் ஒன்றிணைத்து செயற்பட்டு வருகின்றோம். தற்போது புதிய அரசியலமை ப்புக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம். புதிய அரசிய லமைப்பில் பல விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. 

மத விவகாரம், கலாசாரம், நாட்டின் நன்மைகள் மற்றும் அதியுச்ச அதிகார பகிர்வு தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம். இதன்படி புதிய அரசியல மைப்பினை வேகமாக செய்து விட முடியாது. 

கலந்துரையாடல் மூலமாக இதற்கான பணிகளை முடிக்க வேண்டும். இரு வருடங்களாகியும் பிரச்சினை தீர்க்கவில்லை என்று விமர்சிக்கின்றனர். எனி னும் இது நாட்டின் பிரதான பிரச்சினையாகும். 

அதனை இலகுவில் தீர்க்க முடியாது. வேகமாக செய்து விட முடியாது. அடுத்த வருடத்தின் போது இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 70 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 

எனவே அடுத்த வருட 70 வருட பூர்த்தியின் போது நாட்டில் இனங்களுக்கிடை யில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி பிரதான பிரச்சினைகளை தீர்க்க முடி யும் என நம்புகின்றோம். 

அனைத்து இனமக்களுக்கு இலங்கையர்களாக வாழும் சூழலை உருவாக்கு வோம் என்றார்.