எல்லை நிர்ணயம் குறித்து மலையக தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
தேர்தல் திருத்த சட்டமூலம் செவ்வாய்க்கிழமை வர்த்தமானியில் வரும் என்கிறார் பைசர் முஸ்தபா
நுவரெலியா, அம்பகமுவ பிரதேச சபைகளை ஐந்து அலகுகளாக பிரிப் பது குறித்து மலையக தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கவுள்ளதாக மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பை சர் முஸ்தபா தெரிவித்தார்.
மாநகர, நகர, பிரதேச சபைகள் தேர்த ல் திருத்த சட்டமூலம் செவ்வாய்க்கிழமை வர்த்தமானி அறிவித்தலுக்கு விடப்படும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாநகர, நகர, பிரதேச சபைகள் தேர்தல் திருத்த சட்டமூல பிரதியை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் நேற்று கையளித்த மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறிகையிலேயே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் நடத்துவதில் இறுதியான செயற்பாடானது உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் மீள் பரிசீலனையாகும். இது தொடர்பிலான சட்டமூலத்தை இன்று தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் கையளித்தோம்.
இதுவரையாள காலம் தேர்தல் குறித்தும் எல்லை நிர்ணய வேலைத்திட்டம் தொடர்பிலும் மிகவும் ஒத்துழைப்புடன் நாம் இரு தரப்பினரும் செயற்பட்டுள்ளோம்.
மாகாணசபை சட்டமூலத்தில் சில முரண்பாடுகள் எமது இரு தரப்பினரிடையில் இருந்தன.
எனினும் தொடர்ச்சியாக தேர்தல்கள் திணைக்களத்துடன் கலந்தாலோசித்து ஆராய்ந்து செயற்பட்டு வருகின்றோம்.
நுவரெலியா மற்றும் அம்பகமுவ ஆகிய பிரதேச சபைகளில் மக்கள் தொகை இரண்டு இலட்சத்துக்கும் அதிகமாக இருப்பதன் காரணமாக இரண்டு பிரதேச சபைகளை நான்கு அல்லது ஐந்து பிரதேச சபைகளாக பிரிப்பதற்கும் ஆரம்பத்தில் இருந்தே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்த செயற்பாடுகள் குறித்து மலையகத்தின் தமிழ் அரசியல் கட்சிகளுடன் நாம் கலந்துரையாடி வருகின்றோம்.
அதேபோன்று புதுக்குடியிருப்பு, கரைச்சி பிரதேச சபைகள் தொடர்பிலும் நாம் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்.
இந்த விடயத்திலும் தீர்வு ஒன்றினை பெற்றுகொடுக்க வேண்டிய கடமை எம க்கு உள்ளது. ஆகவே அடுத்த வாரங்களில் நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை கையாண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு விடுவோம்.
நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகள் விவகாரம் தொடர்பில் அடுத்து வரும் சில தினங்களில் நாம் மலையக தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளோம். அதேபோன்று நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நாம் கலந்துரையாடவுள்ளோம்.
புதுக்குடியிருப்பு மற்றும் கரைச்சி பிரதேச சபைகள் குறித்தும் நாம் சட்டமா அதிபருடன் கலந்துரையாடவேண்டியுள்ளது.
எவ்வாறு இருப்பினும் செவ்வாய்க்கிழமை உள்ளூராட்சி மன்ற திருத்த சட்டம் வர்த்தமானி அறிவித்தலுக்கு விடப்படும் வாய்ப்புள்ளது என்றார்.








