Breaking News

மஹிந்­தவை மீண்­டும்­ ஆட்­சிக்கு கொண்­டு­வ­ரவா முயல்கிறீர்கள்

சுரேஷ், கஜேந்­திரன், சிவா­ஜி­லிங்­கத்­திடம் டிலான் பெரேரா கேள்வி 

ஜனா­தி­ப­தியின் யாழ்.விஜ­யத்­திற்கு எதி­ராக கறுப்­புக்­கொடி போராட்டம் நடத்­திய சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் மற்றும் சிவா­ஜி­லிங்கம் உள்­ளிட்டோர் மீண்டும் மஹிந்த ராஜ­ப­க் ஷவை பத­விக்கு கொண்­டு­வர முயற்­சிக்­கின்­றார்­களா என்று நாங்கள் நேர­டி­யா­கவே அவர்­க­ளிடம் கேள்வி எழுப்­பு­கின்றோம் என சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்த முடி­யா­விடின் இவர்கள் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்த எதிர்­பார்க்­கின்­றார்­களா? எனவும் அவர் கேள்வி எழுப்­பினார். 

கடந்த சனிக்­கி­ழமை ஜனா­தி­ப­தியி்ன் யாழ். விஜ­யத்­தின்­போது அவ­ருக்கு எதி­ராக இடம்­பெற்ற கறுப்­புப்­பட்டி போராட்டம் மற்றும் போராட்­டக்­கா­ரர்­களை ஜனா­தி­பதி நேர­டி­யாக சந்­தித்­தமை தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே டிலான் பெரேரா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்: ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ்­மொ­ழித்­தின விழாவில் கலந்­து­கொள்­வ­தற்­கா­கவே யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்தார். 

இதன்­போது சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் மற்றும் சிவா­ஜி­லிங்கம் ஆகிய முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் பலர் இணைந்­து­கொண்டு ஜனா­தி­ப­திக்கு எதி­ராக ஆர்ப்­பாட்டம் செய்­தனர். 

இந்­நி­லையில் தனது நாட்டு பிர­ஜைகள் எதற்­காக ஆர்ப்­பாட்டம் செய்­கின்­றனர் என்­ப­தனை அறிய ஜனா­தி­பதி ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை நேரில் சந்­தித்தார். அவர்­களை சந்­தித்த ஜனா­தி­பதி பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு வரு­மாறு கோரிக்கை விடுத்தார். 

ஆனால் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் மற்றும் சிவா­ஜி­லிங்கம் ஆகியோர் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்த முடி­யாது என்ற தொனியில் கருத்து வெ ளியிட்­டி­ருக்­கின்­றனர். 

இதனை நாங்கள் மிகவும் கவ­லை­யுடன் நோக்­கு­கின்றோம். ஜனா­தி­பதி தனது நாட்டு பிர­ஜை­களின் பிரச்­சி­னைகள் என்ன என்­பதை ஆராய்­வ­தற்கே ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை சந்­தித்தார். 

ஆனால் அவர்கள் ஜனா­தி­ப­தியை அசௌ­க­ரி­யப்­ப­டுத்தும் வகையில் நடந்­து­கொண்­டனர். தற்­போது தெற்கில் ஜனா­தி­பதி வடக்கில் இன­வா­தி­க­ளிடம் மண்­டி­யிட்­ட­தாக பிர­சாரம் செய்­கின்­றனர். 

இந்த நிகழ்வை தெற்கில் இன­வா­திகள் கொண்­டா­டி­யி­ருப்­பார்கள். மறு­புறம் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் மற்றும் சிவா­ஜி­லிங்கம் ஆகி­யோ­ரிடம் நான் ஒரு கேள்­வியை எழுப்­பு­கின்றேன். 

அதா­வது தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் பேச்­சு­வார்த்தை நடத்த தயார் இல்லை எனின் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் அவர்கள் பேச்சு நடத்த விரும்­பு­கின்­ற­னரா? என்று கேட்­கிறேன். 

அதா­வது மீண்டும் மஹிந்த ராஜ­ப­க்ஷவை ஆட்­சிக்குக் கொண்­டு­வர இவர்கள் விரும்­பு­கின்­ற­னரா? 

இந்தக் கேள்­விக்கு இவர்கள் மூவரும் பதி­ல­ளிக்­க­வேண்டும். நாங்கள் அதி­கா­ரத்தைப் பகி­ர­வேண்­டு­மென்றும் பொலிஸ், காணி அதி­கா­ரங்­களை வழங்­க­வேண்டும் என்றும் பிர­சாரம் செய்து வரு­கின்றோம். இவ்­வா­றான சூழ்­நி­லை யில் ஜனா­தி­ப­தியின் யாழ். விஜ­யத்­திற்கு இவர்கள் தடை ஏற்­ப­டுத்­து­வது தமிழ் மக்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை வழங்­கக்­கூ­டாது என்ற தென்­னி­லங்கை இன­வா­தி­களின் கூற்றை வலுப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­து­விடும். 

 தற்­போயை ஜனா­தி­ப­தியின் காலத்தில் மட்­டுமே நாட்டின் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வைக் காண­மு­டியும். இதன் பின்னர் இது­போன்­ற­தொரு சந்­தர்ப்பம் கிடைக்­காது. அத­னால்தான் இறுதி பஸ்­ஸுக்­காக காத்து நிற்­கின்றோம் என நான் அடிக்­கடி கூறு­கின்றேன். 

ஆனால் வடக்கு அர­சி­யல்­வா­தி­களின் செயற்பாடுகளை பார்க்கும்போது இறுதி பஸ்ஸையும் தவறவிட்டுவிடுவார்கள் போல் தெரிகிறது. 

எனவே மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை அதிகாரத்தை கொண்டுவருவதற்கா வடக்கின் ஒரு சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர் என்ற எனது கேள்விக்கு பதில் தேவைப்படுகின்றது. 

எனது கேள்விக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய மூவரும் பதிலளிப்பார்கள் என நம்புகின்றேன் என்றார்.