சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞருக்கு 10 வருட கடூழிய சிறை! - THAMILKINGDOM சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞருக்கு 10 வருட கடூழிய சிறை! - THAMILKINGDOM

 • Latest News

  சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞருக்கு 10 வருட கடூழிய சிறை!

  16 வய­துக்கு குறைந்த சிறுமியை காத­லித்து பாலியல் வல்லுறவு புரிந்த  குற்­றத்­தில் முல்­லைத்­தீவு இளை­ஞன் ஒருவருக்கு வவு­னியா மேல் நீதி­மன்றம் நேற்று 10 வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை வி­தித்து தீர்ப்­ப­ளித்­தது. 

  முல்­லைத்­தீவு, மாங்­குளம், ஒலு­மடு பிர­தே­சத்தைச் சேர்ந்த 23 வய­து­டைய நாக­ராசா ஜெக­தீஸ்­வரன் என்ற இளை ஞன், 2011 ஆம் ஆண்டு ஜூலை மற்று ம் நவம்பர் மாதங்களில் சிறுமி ஒரு­வரை காத­லிப்­ப­தாக கூறி அவரை காத­லித்து ஏமாற்றி பாலியல் வல்லு றவுக்கு உட்படுத்தி ஒரு குழந்­தைக்கு தாயாக்­கி­யுள்ளார். அத­னை­ய­டுத்து குறித்த இளைஞன் தன்னை திரு­மணம் செய்வார் என காத்­தி­ருந்த பெண் அவர் வேறு திரு­மணமாகியுள்ளார் என்­ப­தனை அறிந்து பொலிஸில் முறைப்­பாடு தொடுத்துள்ளார்.

  இவ் முறைப்­பாட்­டி­னை­ய­டுத்து குறித்த நபரை கைது செய்த முல்­லைத்­தீவு பொலிஸார் நீதிவான் நீதி­மன்­றத்தில் முற்­ப­டுத்­தி­ வழக்கு விசா­ர­ணைகள் முல்­லைத்­தீவு நீதிவான் நீதி­மன்­றத்தில் நடைபெற்றுள்ளது.

  கடந்த 24.08.2017 ஆம் திக­தி­யன்று சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் குற்­றப்­ப­கிர்வு பத்­திரம் வவு­னியா மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்டு வழக்கு விசா­ர­ணைகள் நடைபெற்று சாட்­சி­யங்கள் மன்­றினால் பரி­சீ­லிக்­கப்­பட்டு நேற்று தீர்ப்­பு வழங்கப்பட்டுள்ளது. 

  இதன் பிர­காரம் குறித்த இளைஞன் 16 வய­துக்­குட்­பட்ட பெண் பிள்­ளையை காத­லிப்­ப­தாக தெரி­வித்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமைக்கு 10 வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதித்து தீர்­ப்ப­ளிக்­கப்­பட்­டுள்ளது. 

  அத்­துடன் பிறந்த குழந்­தைக்கு மூன்று இலட்சம் ரூபா நஸ்­ட­ஈடு செலுத்­து­மாறும் அதை செலுத்த தவறின் 2 வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை அனு­ப­விக்க நேரிடுமெனவும் தண்­டப்­ப­ண­மாக பத்­தா­யிரம் ரூபாவை செலுத்­து­மாறும் அதை செலுத்த தவறின் ஒரு மாத சாதா­ரண சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடுமென தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளது.  

  இவ் வழக்கில் அரச தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழ க்கினை நெறிப்படுத்தியிருந்தார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞருக்கு 10 வருட கடூழிய சிறை! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top