Breaking News

டிப்ளோமா பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்திட - கல்வியமைச்சு தீர்மானம்

கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் சித்தியெய்திய மற்றும் டிப்ளோமா பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்திட கல்வியமைச்சு தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெற்றிடங்களுக்கமைய தரம் 6 முதல் 11 வரையான வகுப்புகளுக்கான நியம னங்கள், இதனூடாக வழங்க எதிர்பா ர்க்கப்படுவதாக கல்வியமைச்சின் மேல திக செயலாளர், ஹேமந்த பிரேமதிலக தெரிவித்தார் இதனடிப்படையில் 6686 ஆசிரியர்கள் இணைக்கவுள்ளமை தெரி வாகும். 

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் தட்டுப்பாட்டிற்கேற்ப இந்த நியமனங்கள் வழங்கப்படும். சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இவ்வாறு ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ள னர். 

1969 வெற்றிடங்கள் தற்போது கிழக்கு மாகாணத்தில் நிலவுவதாக கல்வி யமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை தென் மாகாணத்தில் 1068 வெற்றிட ங்களும், மத்திய மாகாணத்தில், சிங்கள தமிழ் மொழி மூலங்களில் 884 வெற்றி டங்களும் காணப்படுகின்றன. 

 தரம் 6 முதல் 11 வரை இந்த வெற்றிடங்கள் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேல் மாகாணத்தில் சிங்கள மொழி மூல ஆசிரியர்கள் 342 பேருக்கான வெற்றி டங்கள் நிலவுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 

புதிய ஆசிரிய நியமனங்களுக்கு, அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதுடன், வர்த்தமானி அறிவித்தல் அனுமதிக்காக மீளவும் ஆணைக்குழுவுக்கு  அனுப்பப்பட்டுள்ளது. 

மேலும் புதிய நியமனங்களை விரைவில் வழங்குவதற்கும், உரிய வர்த்த மானி அறிவித்தலை பிரசுரிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கல்வியமைச்சு வெளியிட்டுள்ளமை நிரூபனமாகியுள்ளது.