வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பு போராட்டம் ஆரம்பம்!
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யத அனைத்து தமிழ் அரசி யல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே யின் அலுவலகம் முன்பாக பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெ ற்றுள்ளது.
19 அமைப்புக்கள் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இப்போராட்டத்தில் ஆயிரக்கண க்கானவர்கள் பங்கேற்று எந்தவித நிபந்தனை களுமின்றி தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு போன்ற வாசகங்கள் ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொ ண்டிருக்கின்றனர்.









