ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க தயார் !
பிரதமர் ரணில் அறிவிப்பு
பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணை க்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழை ப்பு வழங்க எந்த நேரத்திலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராக இருப்பதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியி ட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு ள்ளதாவது, பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தேடிப்பார்க்க நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் விசாரணை இடம்பெறும்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆணைக்குழுவுக்கு தேவைான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அது தொடர்பாக விளக்கமளிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தயாரா இருக்கின்றார்.
நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டவே ஜனவரி 8ஆம் திகதி நாட்டு மக்கள் பெரும்பான்மையாக ஆணை வழங்கியிருந்தார்கள். அரசாங்கத்துக்கோ அரச அதிகாரிகளுக்கோ குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கும் தேடிப்பார்ப்பதற்கும் அரசாங்கம் எப்போதும் செயற்பட்டு ள்ளது. அத்துடன் எதிர்காலத்திலும் அதோபோன்று செயற்படும்.








