Breaking News

ஒருமித்த நாடு என்பதை ஒருபோதும் அனுமதியோம்

தினேஷ் சூளுரை; வடக்கு,கிழக்கு பிரிந்து செல்லும் அபாயம் என்­கிறார். 

ஒரு­மித்த நாடு என்ற அடிப்­ப­டையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை முன்­வைத் தால் அதனை நிச்­ச­ய­மாக கூட்டு எதி­ரணி தோற்­க­டிக்கும். விசே­ட­மாக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் போது நாங்கள் அதனை தோற்­க­டிப்போம் என்று கூட்டு எதி­ர­ணியின் தலை­வரும் பாரா ­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஸ் குண­வர்த்­தன தெரி­வித்தார். 

ஒரு­மித்த நாடு என்­பது சமஷ்டி முறை­மைக்கு சம­னா­ன­தாகும். எனேவ ஒரு மித்த நாடு என்ற அடிப்­ப­டையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்டு வந்தால் நிச்­சயம் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இலங்­கை­யி­லி­ருந்து பிரிந்து சென்று விடும் அபாயம் ஏற்­படும். அதனை நாங்கள் மக்­க­ளுக்கு உணர்த்­துவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

ஒரு­மித்த நாடு என்ற முறை­மைக்கு கூட்டு எதி­ரணி கடும் எதிர்ப்பை வெ ளியிட்டு வரு­கின்ற நிலையில் அடுத்த கட்ட நட­வ­டிக்கை குறித்து வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

கூட்டு எதி­ர­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஸ் குண­வர்த்­தன மேலும் இது தொடர்பில் குறிப்­பி­டு­கையில், ஒரு­மித்த நாடு என்ற முறை­மை­யுடன் புதிய அர­சி­ய­ல­மைப்பு நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்று இட­ம­ளிக்க மாட்டோம். 

அதனை நாங்கள் நிச்­சயம் தோற்­க­டிப்போம். சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு இதற்­காக நடத்­தப்­படும் பட்­சத்தில் அதனை கூட்டு எதி­ரணி தோற்­க­டிக்கும். எமது நாடு தற்­போது ஒற்­றை­யாட்சி முறை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது. 

அதனை ஒரு­மித்த நாடு என மாற்­று­வ­தா­னது ஒரு கூட்­டி­ணைந்த நாடு என்ற நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­விடும். ஒரு­மித்த நாடு என்ற முறை­மை­யா­னது கிட்­டத்­தட்ட சமஷ்டி முறை­மைக்கு சம­மா­ன­தாகும். 

இதன்கீழ் தேவை­யெனின் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் பிரிந்து செல்லும் அபா­யமும் ஏற்­ப­டலாம். எனவே இதற்கு இட­ம­ளிக்க முடி­யாது. ஒற்­றை­யாட்சி என்று வரும்­போது எந்­த­வொரு மாகா­ணத்­தி­னாலும் தனித்த பிரிந்து செல்ல முடி­யாது. 

ஆனால் ஒரு­மித்த நாடு என்று வந்தால் நிச்­சயம் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் பிரிந்து செல்லும் அபாயம் ஏற்­படும். எனவே இதனை தோற்­க­டிக்க வேண்­டிய தேவை எமக்கு காணப்­ப­டு­கி­றது. 

நாங்கள் மக்களிடையே இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். அதனூடாக ஒருமித்த நாடு என்ற பதத்துடன் அரசியலமைப்பு வந்தால் நிச்சயம் அதனை சர்வஜன வாக்கெடுப்பில் தேற்கடிப்போம் என்றார்.