இன்று உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைசல் முஸ்தபாவுடன் - மனோ
நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதி கரிப்பதற்காக இன்று இறுதிப்பேச்சு வார்த்தை இடம்பெறவுள்ளதாக தேசி ய சகவாழ்வு மற்றும் அரச கரும மொ ழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மகாணசபைகள் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைசல் முஸ்தபாவுடன் நடைபெறும் இப் பேச்சுவார்த்தையில் இதற்கான தீர்வு எடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சிமன்ற தேர்தலை ஒத்தி வைப்பதற்கு தன்னை எவரும் பகடை க்காயாக பயன்படுத்த முடியாது என வும் அமைச்சர் மனோ கணேசன் இதன்போது சூளுரைத்துள்ளார்.
உள்ளுராட்சிமன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் தேவை சம கால தேசிய அரசாங்கத்திற்கு இல்லையென தெரி வித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக உள்ளு ராட்சி மன்றங்களை உருவாக்குவது குறித்து நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏனைய பகுதிகளுடன், ஒப்பிடுகையில் அம்பேகமுவ பிரதேச சபை மற்றும் நுவரெலியா மாநகர சபை ஆகிய பிரிவுகளில் கூடுதலான மக்கள் வாழுகின்றனர்.
இதன்காரணமாக இப்பிரிவுகளில் உள்ளுராட்சி மன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டுமென அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக தெரிவித்து ள்ளார்.








