கண்டம் விட்டுக்கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்த - வடகொரியா
எதிர்ப்புகளிற்கு மத்தியிலும் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை ஒன்றை வடகொரியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
வடகொரியாவின் கிழக்குப் பகுதியில் இந்த ஏவுகணை பரிசோதனை நடத்த ப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
எனினும் இந்த ஏவுகணை எப் பகுதியை நோக்கி ச் சென்றது தொடர்பான மேலதிக தக வல்கள் எதுவும் இதுவரை தெரிவிக்க ப்படவில்லை.
இதன் காரணமாக வடகொரியாவினால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சவாலை எதிர்கொள்வது குறித்து அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆரா ய்ந்த வண்ணமுள்ளனர்.
மேலும் சர்வதேச ரீதியில் விமர்சனத்திற்கு உள்ளாகிவரும் வடகொரியா, மீண்டுமொரு ஏவுகணை பரிசோதனையை நடத்தியிருப்பதாலும் மேலும் பல எதிர்ப்புக்களை சேகரிக்குமென சர்வதேச ஆய்வாளர்கள் எதிர்வு தெரிவித்து ள்ளனர்.