Breaking News

உரிமையாளரைக் காணாது மனமுடைந்த பிராணி மரணம் !

நாய் ஒன்று மனம் உடைந்து போனதால் மரணமடைந்த சம்பவம் கொலம்பிய விமான நிலையத்தில் கடந்த மாதம் உரிமையாளருடன் விமான நிலைய த்துக்கு வந்த இந்த நாயை, குறித்த நபர் அழைத்துச் செல்லாமல் விமானம் ஏறி விட்டார். 

உரிமையாளரை நீண்ட நேரமாகக் காணாது நாய் சிறிது பதற்றமடைந்து, விமான நிலையத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று தேடிப் பார்த்தது. நாட்கள் நகர்ந்து சென்றது. 

ஆனால் உரிமையாளர் மட்டும் திரும்பி வரவேயில்லை. மனம் உடை ந்து போன நாய், விமான நிலைய ஊழியர்களும் பயணிகளும் கொடுத்த உணவு களைச் சாப்பிடாமல் புறக்கணித்தது. தண்ணீர் பருகுவதையும் கை விட்டு நாளுக்கு நாள் உடல் மெலிந்து மன அழுத்தத்துக்கு உள்ளாகி நடக்கக்கூ டத் தெம்பு இல்லாத நிலையிலும் உரிமையாளர் வந்துவிட மாட்டாரா என்று ஏங்கிக்கொண்டிருந்தது. 

இறுதியில் விமான நிலையத்தின் அதிகாரிகள் நாயின் பரிதாப நிலையைக் கண்டு, கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே நாய்க்கு மருந்தும் திரவ உணவும் செலுத்தப்பட்டன. 

ஆனால் 48 மணி நேரத்தில் நாய் இறந்துவிட்டது. 'இது ஒரு இளம் நாய். எந்தவித நோயும் இந்த நாய்க்கு இல்லை. மன அழுத்தம் ஒன்று மட்டுமே, அதுவும் சமீப காலங்களில் இருந்திருக்கிறது. 

மன அழுத்தத்திலும், முரட்டுத்தனமோ, கோபமோ இந்த நாயிடம் பார்க்க முடியவில்லை. மிகவும் அன்பான நாய். ஒருவரின் அன்புக்காக ஏங்கி, மனம் உடைந்து, தன் இறப்பைத் தானே தேடிக்கொண்டது வருத்தமளிக்கிறது' 

என கால்நடை மருத்துவர் சோட்டோமோன்ட் தெரிவித்துள்ளார்.  இச்செய்தி சமூக வலைத்தளங்கள் மட்டுமன்றி சர்வதேச ஊடகங்களிலும் தெரிவிக்க ப்பட்டுள்ளது உரியவர் அறிய வேண்டுமென்பதற்காக.