Breaking News

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தில் யாரும் விரைவில் கைதாகலாம் - கூட்டு எதிர்க்கட்சி!

மத்திய வங்கியின் பிணை முறி ஊழல் விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதை மறைப்பதற்காக மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தில் யாரையாவது கைதாகும் சந்தர்ப்பம்  காணப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரி வித்தார். 

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தில் ஒரு வரை கைது செய்து பிணைமுறி ஊழல் விவகாரத்தையே மூடி மறை க்க நல்லாட்சி அரசாங்கம் முயல்வ தாக  குற்றம் சுமத்தினார். கொழு ம்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கி ழமை நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி யின் கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிட்ட பந்துல குணவர்த்தன, பிணை முறி ஊழல் விவகாரம் விடயமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை யின் அடிப்படையில் அரசாங்கம் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடு த்துள்ளார். 

பிணைமுறி ஊழல் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கப்படவுள்ளது. அவ்வாறு கையளிக்கப்பட்ட அறிக்கையின் பிரதியொன்றை ஜனாதிபதி சபாநா யகருக்கு அனுப்ப வேண்டுமெனக் கூறிய பந்துல குணவர்த்தன, அறிக்கை யின் பிரகாரம் குற்றவாளிகளுக்குத் தன்டனை வழங்க வேண்டுமெனவும் விவாதித்துள்ளார். 

பிணைமுறி ஊழல் விவகாரம் தற்போது மக்கள் மத்தியில் அதிகளவு பகிரப்படு வதால் அதனைத் திசைதிருப்ப பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படு கின்றன. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாஜ ராஜபக்ச அல்லது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகிய இருவரில் ஒருவரை கைது செய்ய திட்டமிடப்படுவதாக பந்துல குணவர்த்தன அக்கலந்துரையாடலில் தெரிவி த்துள்ளார். 

கோத்தபாஜ ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாமென கொழும்பில் இன்று வெளியான சிங்கள நாளேடு ஒன்றில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.