Breaking News

புலிகளின் தங்கத்தை தேடி தேடுதல் வேட்டை முல்லைத்தீவில் !

இறுதி யுத்தம் நடைபெற்ற இடத்தில்  தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களால் புதை க்கப்பட்ட நகைகள் மற்றும் பணம் என்­ப­ன­வற்­றினைத் தேடி நேற்றைய தினம் முல்லைத்தீவில் அகழ்வு நட­வ­டிக்­கை­யினை பொலிஸார், விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் மற்றும் இரா­ணு­வத்­தினர் இணைந்து தேடுதல் வேட்டையில்....


முல்­லைத்­தீவு சுதந்­தி­ர­புரம் நிரோஜன் விளை­யாட்டு மைதா­னத்­தி­லேயே இந்த அகழ்வு பணிகள் முன்­னே­டுக்­க­பட்­டுள்ளது. அதி­ர­டிப்­ப­டை­யி­னரின் விசேட பாது­காப்­புக்கு மத்­தியில் முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்ற நீதி­பதி எஸ். எம். எஸ். சம்­சுதீன் முன்­னி­லையில் இவ் அகழ்வு நட­வ­டிக்கை காலை 10 மணி­ய­ளவில் இடம்பெ ற்றுள்ளது. விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருக்கு கிடைத்த இர­க­சிய தக­வலின் அடிப்­ப­டையில் குறித்த பிர­தே­சத்தில் விடு­த­லைப்­பு­லி­களால் நூற்­றுக்­க­ணக்­கான கிலோ­கிராம் தங்கம் புதைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­வித்து முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்றின் அனு­மதி பெறப்­பட்டு நடை­பெற்ற அகழ்வு நட­வ­டிக்­கையில் எந்தவித பொருட்களும் மீட்கப்பட வில்லை. 

இதனையடுத்து அகழ்வு பணிகள் நீதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறு த்தபட்டது.