Breaking News

மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் வடகிழக்கில் அனுஷ்டிக்க ஏற்பாடு.!

தமி­ழீழ விடு­த­லைப்­புலிகள் அமைப்­பி­லி­ருந்து உயி­ரி­ழந்த போரா­ளிகளை நினை­வு­ கூரும் மாவீரர் நாள் நிகழ்வு இன்­றைய தினம் வடக்கு, கிழக்கில் உணர்வெழுச்­சி­யுடன் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

இதற்­கான ஏற்­பா­டுகள் அனைத்தும் வடக்­கு­கி­ழக்கு பகு­தி­யெங்கும் தீவி­ர­மாக முன்­னெ­டுக்க­ப்பட்­டுள்­ளன. இந்­த­நி­லையில் முல்லைத்தீவு மாவட்­டத்தில் ஒன்­பது மாவீரர் துயி­லு­மில்­லங்­களில் இன்­றைய தினம் மாவீரர் நாள் நினை­வேந்தல் நிகழ்­வுகள் சிறப்­பாக அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. இத­னை­விட கிளி­நொச்சி யாழ்ப்­பாணம் பகு­தி­க­ளிலும் 13 மாவீரர் துயிலும் இல­லங்­களில் அஞ்­சலி நிகழ்­வு­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. அர­சியல் கட்­சிகள் சிவில் அமைப்­புகள்,மக்கள், என பல­த­ரப்­பட்­ட­வர்­க­ளாலும் ஒவ்­வொரு துயி­லு­மில்­ல­க­ளிலும் மாவீரர் நாள் ஏற்­பா­டுகள் தீவி­ரமாக் முன்­னெ­டுக்­க­பட்­டது. 
அனைத்து துயி­லு­மில்­லங்­களும் இரா­ணு­வத்தால் இடித்­த­ளிக்­க­பட்­டுள்ள நிலை­யிலும் சில மாவீரர் துயி­லு­மில்­லங்­களில் இரா­ணுவம் நிலை­கொண்­டுள்ள போதிலும் மக்கள் துப்­ப­ர­வாக்கல் பணி­களை மேற்­கொண்டு மாவீரர் நாளை உணர்­வெ­ளிச்­சி­யுடன் அனுஷ்­டிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை சிறப்­பாக முன்­னெ­டுத்­துள்­ளனர். 
இதன்­படி முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் தேராவில் துயி­லு­மில்லம் , மல்­லாவி வன்­னி­வி­ளாங்­குளம் மாவீரர் துயி­லு­மில்லம் ,முள்­ளி­ய­வளை மாவீரர் துயி­லு­மில்லம், அலம்பில் மாவீரர் துயி­லு­மில்லம், இர­ணைப்­பாலை மாவீரர் துயி­லு­மில்லம், தேவி­புரம் மாவீரர் துயி­லு­மில்லம், இரட்­டை­வாய்க்கால் மாவீரர் துயி­லு­மில்லம், முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம், களிக்காடு கோடா லிக்கல்லு மாவீரர் துயிலுமில்லம் ஆகிய இடங்களில் மாவீரர் நாள் நினை வேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக ஈடேறவுள்ளது. 
யாழில் உடுத்துறை, திருவில், சாட்டி, கிளிநொச்சியில் கனகபுரம், முழங்கா வில், மன்னார் ஆட்காட்டிவெளி, பண்டிவிரிச்சான், வவுனியா ஈச்சங்குளம் போன்ற மாவீர் துயிலுமில்லங்களிலும் இன்றைய தினம் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. 

இதனைவிட யாழ்.பல்கலைகழகத்திலும் மாவீரர் தின நிகழ்வுகள் நடாத்து வதற்கு ஒழங்கமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  பல்கலைக்கழக வளா கம் சிவப்பு மஞ்சல் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் மாவீரர் நாளைக் குறிக்கும் வகையிலான பதாதைகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் உடுத்துறையில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வில் முதலாவது சுடரினை நான்கு போராளிகளை பெற்றெடுத்த கந்தசாமி ஈஸ்வரியம்மாள் எற்ற வுள்ளார். 

அதேபோன்று இன்று காலை பத்து மணிக்கு வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான அணியினர் யாழ்.நல்லூரில் உள்ள திலீப னது நினைவிடத்தில் சுடரேற்றி அங்கிருந்து இராணுவத்தின் கட்டுப்பாடுகளி லுள்ள மாவீரர் துயிலுமில்லங்களான கோப்பாய், கொடிகாமம், எல்லாங்குளம் ஆகிய மாவீரர் துயிலும் இல்லங்களிற்கும் சென்று அங்கு இராணுவ முகாம்க ளுக்கு முன்னால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது. 

அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு தொண்­ட­ம­னாறு கடலில் மாவீ­ரர்­தின நிகழ்­வுகள் நடாத்­து­வ­தற்கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. மாவீரர் துயி­லு­மில்­லங்­களில் ஒழுங்­க­மைக்­கப்­பட்ட அஞ்­சலி நிகழ்­வுகள் சரி­யாக மாலை 6.02 மணிக்கு மணி ஒலி எழுப்­பப்­பட்டு மாலை 6.05 மணிக்கு ஈகச்­சு­ட­ரேற்றல் நிகழ்­வுகள் ஈடேறவுள்ளன. 

இதன்­போது மாவீரர் நாள் பாடல்­களும் ஒலிக்­க­வி­டப்­ப­ட­வுள்­ள­தாக மாவீரர் நாள் நிகழ்­வுகள் ஒழுங்­க­மைப்­பா­ளர்கள் தெரி­வித்­துள்­ளார்கள். பிர­பா­க­ரனின் பிறந்­தநாள் அனுஷ்­டிப்பு இதே­வேளை தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் 63 ஆவது பிறந்த தின­மான நேற்று வல்­வெட்­டித்­து­றையில் உள்ள அவ­ரது வீடு அமைந்­தி­ருந்த இடத்தில் தமிழ்த் தேசியப் பண்­பாட்­டுப்­பே­ர­வையின் ஏற்­பாட்டில் கேக் வெட்டி கொண்­டா­டப்­பட்­டுள்­ளது. 

இதே­போன்று காலை 10 மணி­ய­ளவில் வட­மா­காண சபை உறுப்­பினர் எம்.கே. சிவா­ஜி­லிங்கம் தலை­மையில் பிர­பா­க­ர­னது வீட்டு வளவில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்­டா­டப்­பட்­டது. 
யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் பிர­பா­க­ர­னது பிறந்த தினத்தை முன்­னிட்டு அவ­ரது புகைப்­ப­டங்கள் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததுடன் மாண வர்களால் கேக் வெட்டப்பட்டு பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.