Breaking News

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளை நிம்மதியாக வாழ விடுங்கள் - சிவமோகன்

இலங்கையில் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின் விடுதலைப்புலிகள் அமை ப்பின் போராளிகளுக்கு அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், வரவுசெலவுத் திட்ட த்திலே விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளுக்கான தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழை வழங்குவதற்காக 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய ப்பட்டிருந்தது.  

இது ஒரு சிறிய தொகையாக இருந்தா லும் எடுக்கப்பட்ட இவ் முயற்சியை நான் வரவேற்கின்றேன். ஆனால், புனர்வாழ்வு பெற்ற போராளிகள் என அடை யாளம் காட்டப்படுபவர்கள் இதன் பயனாளிகள் ஆவர். 

ஆனால் இவர்களின் இன்றைய நிலை என்ன? 

அவர்கள் புனர்வாழ்வு பெற்று நிம்ம தியாக தமது வாழ்வைத் தொடங்கு கின்றபோது, அரச புலனாய்வுப் பிரிவி னரால் விடுதலைப்புலிகள் அமை ப்பில் இருந்தபோது ஆட்சேர்ப்பில் ஈடு பட்டார்கள் எனக் குற்றம் சுமத்தப்ப ட்டு, அவர்கள் மீது வழக்குத் தாக்கு தலை தொடங்கியிருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் குற்றம் சுமத்தியுள்ளார். 

பாராளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின் போதே அவர் மேற்க ண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவாக அவர்கள் தற்போது நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கி றார்கள். 

வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்கள் விமான நிலையம் கடந்து செல்ல முடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு அவர்களை அரசு தள்ளியுள்ளது. நீங்களே அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கி மன்னித்து விடுதலை செய்து ள்ளதாக சர்வதேசத்துக்கு தெரிவித்துள்ளீர்கள். 

மீண்டும் இவ்வாறான அராஜகத்தைத் தொடங்கியிருக்கிறீர்கள். அவர்கள் விமான நிலையத்தை கடந்து போக முடியாதெனில் கடலைத் தான் கடக்க வேண்டும். 

எனவே மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை ஆரம்பிக்கும் நோக்கில் இவ்வரசு செயற்படக்கூடாது. பழைய விடயங்களுக்காக  இல்லாத சாட்சிகளையெ ல்லாம் பணத்தை வழங்கித் தயார்செய்து பொய்யான சாட்சிகளை உருவாக்கி அவர்களுக்கெதிராக இவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பதை நிறுத்திக்கொ ள்வது மிகவும் மேலானதாக இருக்குமென்பதை நான் நிரூபிக்க விரும்புவதாக  தனது உரையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.