வடக்கு முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த - சுமித்திரன்!

மேலும் தெரிவிக்கையில்,...
கூட்டாட்சியை (சமஷ்டி) முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் சிங்களவர்கள். இதை முதலில் பிரிட்டிஷாரிடம் பரிந்துரைத்தவர்கள் கண்டியச் சிங்களவர்கள். அதனால் கூட்டாட்சியைச் சிங்கள மக்களுக்கு எதிரானதென எவரும் கூறமுடியாது.
இவ் விடயங்களை அவர்கள் பயப்படாமல் இருக்கும் வகையில் கூறவேண்டும்.
ஒரு நாட்டின் அரசமைப்பு மக்கள் பார்த்துப் பயப்படும் ஒன்றாக இருக்கக் கூடாது.
சொற்களைக் கண்டு பயந்தால் அந்தச் செற்களைத் தள்ளி வைத்துவிட்டு உள்ளடக்கங்களைப் பார்க்கவேண்டும்.
70 ஆண்டுகளாக எமது மக்களின் வேணவாக்களாக இருந்த, எங்களை எமது மாநிலத்தில் ஆட்சி செய்கின்ற அதிகாரம் இருக்கிறதா இல்லையா? என பார்க்க வேண்டும்.
சொற்களை வைத்து போலித் தேசிய வாதம் பேசாதீர்கள்.
அனைத்து நாடாளுமன்றச் சட்டங்களும் மாகாணசபை நியதிச் சட்டங்களும் துணை நிலை சட்டவாக்கங்களும் சிங்களத்திலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இயற்றப்படுதல் வேண்டும் என உபகுழு அறிக்கையிலே தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசமைப்பிலே சிங்களம் மேலோங்கும் என எங்கும் சொல்லப்படவில்லை. மூன்று மொழிகளுக்கும் சம அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் அடிப்படை விடயங்கள் இடைக்கால அறிக்கையில் மறுக்கப்பட்டுள்ளது என்று எவராலும் கூற முடியாது.
நாங்கள் தற்போது அரைவாசித் தூரம்தான் வந்துள்ளோம். இது சரிவரும்; சரிவராமலும் போய்விடலாம்.
சரிவராமல் போய்விடுமோ என்ற பயத்தினாலே இப்போதே வெளிவாருங்கள் எனக் கூறும் மூடன் யார்?
மூடத்தனமாக மக்களைத் தேவையில்லாது உசுப்பேத்தி அவர்களுக்குள்ளே வீணாகப் பீதியை உருவாக்கி இதுவரை நாங்கள் இழந்த இழப்புகளுக்கு மாற்றீடாக ஓர் அரசியல் தீர்வு கிடைக்கும் வாய்ப்பை நாங்களே மழுங்கடித்து எங்கள் தலையில் நாங்களே மண்ணைப் போட வேண்டுமென்பவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.