Breaking News

கோத்­தாவை கைது செய்தால் தென்­னி­லங்­கையில் போராட்டமாம்.!

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவை கைது செய்தால் தென்­னி­லங்­கையில் பாரிய மக்கள் போராட்டம் நடத்த பொது எதி­ரணி தீர்­மா­னித்­துள்­ளது. 

இர­க­சிய சந்­திப்­புகள், மக்கள் கூட்­டங்­களை நடத்த ஏற்­பா­டு­களும் மும்­மு­ர­மாக இடம்­பெற்று வரு­வ­தாக அர­சியல் வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. முன்னாள் பாது­காப்பு செய­லா ளர் கோத்­தபாய ராஜபக்ஷவை கைது ­செய்ய அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக தக­வல்கள் வெளி­வந்­துள்ள நிலையில் கோத்தா ஆத­ரவு அமைப்­புகள், அர­சியல் கட்­சிகள், பொது எதி­ரணி ஆகிய இணைந்து மறை­முக சந்­திப்­பு­க­ளையும், பல்­வேறு ஏற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுத்துள்ளனர். 

கோத்­தபாய ராஜபக் ஷவை கைது செய்தால் அடுத்­த­தாக தாம் எடுக்கும் நகர்­வுகள் குறி த்து ஆராய முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தலை­மையில் நேற்று முன்­தினம் இரவு கொழும்­பி­லுள்ள அவ­ரது இல்­லத்தில் பொது எதி­ர­ணி­யினர் விசேட சந்­திப்பொன்றை முன்­னெ­டுத்துள்ளனர்.  

இச்சந்­திப்பின் போது சில முக்­கிய தீர்­மா­னங்­களும் நிறைவேற்றப்பட்­டுள்­ளன. குறிப்­பாக தென்­னி­லங்­கையில் மக்கள் கூட்­டங்­களை ஒன்­றி­ணைத்து பாரிய அளவில் போராட்­டங்­களை நடத்­தவும், கொழும்­பிலும் வேறு சில பகு­தி­க­ளி லும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிவி க்கப்பட்டுள்ளது. 

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் நடைபெற்ற கூட்­டத்தில் கலந்­து­கொண்ட பொது எதி­ர­ணியின் உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­ம­கே­விடம் இது குறி த்து வினா­வி­ய­போது அவர் கூறி­ய­தா­வது, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி ற்கும் அவ­ரது சகாக்­க­ளுக்கும் எதி­ராக ஊழல் மோச­டி குற்றச்சாட்டுக்கள் நிரூ பிக்கப்பட்டு வரும் நிலையில் அவை குறித்து நாம் மக்­க­ளிடம் உண்­மை­களை வெளிப்­ப­டுத்தி வரும் நிலை­யி­லேயே இன்று எமக்கு எதி­ராக இவ்­வா­றான பழி­வாங்கல் நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. 

எனக்கு எதி­ரா­கவும் சில குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு என்­னையும் கைது­செய்யும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அதேபோல் இந்த நாட்டை காப்­பாற்­றிய முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவையும் கைது ­செய்ய பாரிய முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

அவரை கைது செய்தால் இந்த நாட்டில் தென்­னி­லங்கையில் குழப்­பங்கள் ஏற்­படும். அவ்­வா­றான நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கார­ணி­களை ஆழ­மாக கலந்­து­ரை­யா­டினோம். 

அவரை கைது­செய்­வது உறு­தி­யாக தெரிய வந்தால் அதற்கு எதி­ராக நாட்டின் சிங்­கள மக்கள் கிளர்ந்­தெழ வேண்டும். எனவே மக்­களை ஒன்­றி­ணைக்கும் வேலைத்­திட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்­மா­னித்­துள்ளோம். தெற்கின் பலம் என்­ன­வென்­பதை இந்த அர­சாங்கம் விளங்­கிக்­கொள்ள வேண்டும். 

அதற்கான சரியான வாய்ப்புக்காக நாம் காத்திருக்கின்றோம். எவ்வாறிருப்பி னும் இந்த நாட்டை நேசித்த, இந்நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நபர்களை தண்டிக்க ஒரு போதும் மக்கள் இடமளிக்கப் போவதில்லை. ஆகவே இவ் விடயங்கள் குறித்து கூட்டத்தில் ஆராய்ந்ததாக தெரிவித்துள்ளார்.