சாம்பியன் பட்டத்தை வென்றார் பல்கேரிய வீரர் கிறகர் திமித்ரோவ் !
ஏ.ரி.பீ பைனல்ஸ் (ATP Finals) டெனிஸ் தொடரின் சம்பியன் பட்டத்தை பல்கேரிய வீரர் கிறகர் திமித்ரோவ் வெற்றிகொண்டுள்ளார். முதல் முறையாக இத் தொடரில் திமித்ரோவ் பங்கேற்றிருந்ததுடன், இறுதிப் போட்டியில் பெல்ஜிய வீரர் டேவிட் கொஃபினை அவர் தோற்கடித்துள்ளார்.
லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதல் செட்டை 7 க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் திமித்ரோ வ் கைப்பற்றிய போதிலும் இரண்டா வது செட்டை கொஃபின் தன்வசப்படு த்தினார்.
எனினும் சுதாகரித்து விளையாடிய திமித்ரோவ் தீர்மானமிக்க மூன்றா வது சுற்றை 6 க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி, சம்பியன் பட்டத்தை தன்னிலைப்படுத்தினார். குழு நிலைப் போட்டிகள், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் கிறகர் திமித்ரோவ் வெற்றியீட்டியுள்ளார்.
இத்தொடரின் சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்ட தன் மூலம் 1 தசம் 9 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான பரிசையும் அவர் வெற்றிகொண்டுள்ளார்.
கிரான்ஸ்லாம் தொடர்களுக்கு அடுத்தபடியாக அதிமுக்கியத்துவம் வாய்ந்த தொடராக ஏ.ரி.பீ பைனஸ் டென்னிஸ் போட்டிகள் காணப்படுகின்றமை குறிப்பி டத்தக்கது.