Breaking News

பரிந்துரை கிடைக்கும் வரை தடையுத்தரவை நீக்க முடியாது - அரசு பதில்!

அம்பாறை-திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வட்டமடு காணி தொடர்பாக எழுந்துள்ள மோத ல்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் கிடைத்தவு டன் அவற்றை செயற்படுத்தும் வரை தடையுத்தரவு நீடிக்குமென அரசா ங்கம் தெரிவிப்பு. வட்டமடு காணியில் பயிர்ச்செய்கை செயற்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் கடந்த காலங்களாக தொடர் போராட்டத்தில் ஈடு பட்டுள்ள நிலையிலேயே இவ்வறிவிப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

நீண்ட காலமாக விவசாயத்தை முன்னெடுத்து தமது காணிகள், வனபரி பாலன திணைக்கள அதிகாரிகளினால் விவசாயம் செய்வதற்கு தடுக்கப்பட்டு வருவதை எதிர்த்து கடந்த வாரங்களில் முஸ்லிம் விவசாயிகள் வட்டமடு, திருக்கோவில் உட்பட பல பகுதிகளிலும் போராட்டங்களையும், பேரணிகளை யும்  முன்னெடுத்துள்ளனர். 

காணிக்கான அனுமதிப்பத்திரத்துடன் உரமானியம் பெற்று விவசாயம் செய்து, நீர்வரி செலுத்திய தங்களுக்குத் தற்போது அதிகாரிகள் தடை விதிப்பது நல்லா ட்சியை கேலிக் கூத்தாக்கியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலா ளரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் கேள்வி எழுப்பியுள்ளார்.

717 விவசாயக் குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாத வகையில் இந்த விவ காரத்தில் ஸ்ரீலங்கா எடுக்கும் தீர்மானம் என்ன என்பது குறித்து அவர் சபையில் இன்று வினா எழுப்பப்பட்டுள்ளது.

இக் கேள்விக்கு பதிலளிப்பதற்கு விவசாயத்துறை அமைச்சர் துமிந்த சில்வா கேள்வி நேரத்தில் சபையில் இல்லாததினால் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, கேள்விக்கான பதிலை வாசித்தார்.

“வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாக அம்பாறை மாவட்டத்தின் பக்மித்தியாவ, திம்பிரிகொல்ல வனப்பகுதி 2010ஆம் ஆண்டு 1673 ஆம் இலக்க வர்த்தமானி அறிவிப்பின்படி 47,136 ஏக்கர் பகுதி வனப்பாதுகாப்பு பகுதியாக பிரகடனமாகியுள்ளது.

இந்த வனத்தில் ஈசான மூலை எல்லையிலுள்ள வட்டமடு பிரதேசத்தில் 4000 ஏக்கர் பகுதி அம்பாறை மாவட்ட செயலாளரினால் அவசர கால சட்டத்திலி ருந்த பிரிவுகளின் கீழ் 1976.04.14ஆம் அன்று கால்நடைகளுக்கான பகுதியாக தெரிவிக்கப்பெற்றது.

தமிழர்களில் கால்நடை வளர்ப்பாளர்களால் இது பாவிக்கப்பட்டு வந்த நிலை யில் பயங்கரவாத அச்சுறுத்தலினால் இந்த வனப்பாதுகாப்பு சற்று இறுக்கப்ப ட்டது.

இக் காலப்பகுதியில் அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை பகுதியிலுள்ள முஸ்லிம் மக்கள், அனுமதிப்பத்திரம் இருப்பதாகக் கூறி 4000 ஏக்கரில் 1500 ஏக்கருக்கு வயல்நிலங்களை ஏற்படுத்தியதுடன் இன்றுவரை அது தங்களது உரித்துடைய காணிகள் எனத் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் அவர்களது உரிமைப்பத்திரம் சட்டசிக்கலுக்கு உரியதாயிருக்கிறது. திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு சொந்தமான இந்தக் காணியின் உரி மம் குறித்து தமிழ்–முஸ்லிம் மக்களுக்கு இடையே முரண்பாடுகள் இனமோத லுக்கான சந்தர்ப்பமாக ஏற்பட்டுள்ளது.

வட்டமடுவில் முஸ்லிம்கள் வயல் நிலங்களில் செயற்பாடுகளில் ஈடுப டும்போது அதற்கெதிராக தமிழ், கால்நடை வளர்ப்பாளர்கள் செயற்படுவதால் இந்த விவகாரத்தில் குற்றவியல் சட்டக்கோவையின் 81ஆவது பிரிவில் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு கல்முனை நீதிமன்றிற்கு மாற்றப்பட்டு தடையுத்தரவும் பிறப்பி க்கப்பட்டு அன்றிலிருந்து இன்று வரை அந்தக் காணியில் எந்தவித நடவடி க்கையையும் மேற்கொள்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இரு பிரிவினருக்குமான இப் பிரச்சினை தொடர்பில் தீர்வு காண்பதற்கு குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு முன்வைக்கும் பரிந்துரைகளை விரைவில் அமுல்படுத்த முயற்சிப்போம்” என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.