2018ம் ஆண்டிற்கான வடமாகாண ஒதுக்கீட்டு நியதிச்சட்ட அறிக்கை முன்மொழிவு!
2018ம் ஆண்டிற்கான வடமாகாணத்தின் ஒதுக்கீட்டு நியதிச்சட்ட அறிக்கை இன்று (05) வடமாகாணசபையில் முதலமைச்சரினால் முன்மொழியப்பட்டு ள்ளது.
வடமாகாணசபையின் நூற்றி பதி னொராவது அமர்வு இன்று(05) கைதடி யிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞா னம் தலைமையில் ஆரம்பமாகியது.
இதன்போது வடமாகாண முதலமை ச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகா ணத்தின் 2018ம் ஆண்டிற்கான நிதிக்கூற்று நியதிச்சட்ட அறிக்கையினை சபை யில் முன்மொழிந்தார். மத்திய அரசாங்கத்தினால் வடமாகாணத்திற்கென பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள இருபத்தாரயிரத்து எழுநூற்று ஐம்பத்தி நான்கு (26,754) மில்லியன் அறுபத்தாராயிரம் ரூபா(66,000) நிதியினை அவையில் முன்மொழிந்த முதலமைச்சர் அதற்கான எல்லைகள் தொடர்பிலும் சபையில் தெரிவித்துள்ளார்.
இதன் மீதான அமைச்சுக்களின் விவாதம் எதிர்வரும் 12ம் 13ம் மற்றும் 14 ஆம் திகதி நடைபெறுமென அவைத்தலைவரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.