Breaking News

சுவிஸ்குமார் தப்பித்த வழக்கில் ஸ்ரீகஜனுக்கு பிடியாணை விடுக்கப்பட்டுள்ளது.!

சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கின் 2 ஆவது சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் எஸ். ஸ்ரீகஜனுக்கு ஊர்கா வற்றுறை நீதிவான் நீதிமன்றம் பிடி யாணை பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று ஊர்காவ ற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா, ஸ்ரீகஜனுக்கு பிடியாணை பிறப்பிக்க வேண்டுமென மன்றை கோரியதற்கு இணங்க மேற்கண்டவாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.