Breaking News

வீட்டிலிருந்த பெண் துப்பாக்கிச் சூட்டினால் பலி !

கொட்டாவை, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வீட்டிலிருந்த பெண்ணொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவம் நேற்றிரவு, கொட்டாவை, பாலிகா வீதியில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த பெண்ணின் வீட்டிற்குள் சம்பவ தினமான நேற்றிரவு உள்நுழைந்த இனந்தெரியாத இரு வர் குறித்த பெண் மீது துப்பாக்கிப் பிரயோ கத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்று ள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசார ணைகளில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 42 வயதுடைய பெண்ணொருவர் எனவும்  கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள தாகவும் பிரேத பரிசோதனை இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ளது.