Breaking News

விடுதலைப் புலிகளின் ஆலோசனைக்கமைவாக கூட்டமைப்பை நகர்த்துவதாக-துளசி!

விடுதலைப்புலிகளின் ஆலோசனைக்கமைவாக நோக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நகர்த்த முயற்சிக்கிறோமென ஜனநாயக போராளிகள் கட்சி யின் ஊடகப் பேச்சாளர் துளசி விவரித்துள்ளார். 

ஜனநாயக போராளிகள் கட்சியினால் இன்று வவுனியா குருமன்காட்டில்  விருந்தினர் விடுதியில் ஒழுங்கமை க்கப்பட்டிருந்த ஊடகச் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 மேலும் தெரிவிக்கையில்,

"தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் இருக்கின்றதோ இல்லையோ ஒட்டு மொத்தமாக தமிழர்கள் தங்களது ஒற்றுமையின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே இது வரை காலமும் பலப்படுத்தியுள்ளார்கள்.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக தமது அரசியல் முக வரியை பெற்றுக்கொண்டவர்கள் தாயக பிரதேசத்திலே தமிழ்த் தேசிய கூட்ட மைப்பை சிதைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ ர்களது அரசியல் வடிவமாக பயணிப்பது காலத்தின் கட்டாயமானதாகும். அந்த வகையிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பாரிய வெற்றிக்கு இட்டுச்செ ல்வதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவான ஜனநாயக போராளிகள் கட்சியானது தனது முழுமையான ஆதரவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கியிருக்கிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தாமல் விட்டால் ஏனைய தேசிய கட்சிகள், தமிழ் தேசியத்தினூடாக தமது பிரதி நிதித்துவத்தை பெறக்கூடிய நிலையேற்படும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் சில விமர்சனங்கள் இரு க்கலாம், கூட்டமைப்பிற்குள் இருப்பவர்களில் சில விமர்சனங்கள் இருக்க லாம் ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தான் தமிழர்களின் ஒற்றுமையின் வெளிப்பாடு.

அனைத்து போராளிகளும் ஜனநாயக போராளிகள் கட்சியுடன் இணைந்தே பயணித்துக்கொண்டு இருக்கிறார்கள். எம்மிலிருந்து பிரிந்து சென்ற ஒரு சில நபர்கள்தான் கட்சிகளையும் முரண்பாடான தோற்றப்பாட்டையும் உருவாக்கி செயற்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் ஏனைய போராளிகள் எம்மோடு இணைந்து தமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்கான பயணத்தில் கை கோர்த்துள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 2001ம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது அந்த கட்டமைப்பில் இரு ந்தவர்களை விட விடுதலைப்புலிகளில் மிகத் திறமையான அரசியலாளர்கள் காணப்பட்டார்கள்.

ஆனால் காலத்தின்தேவை கருதியே தமிழ்த் தேசியத்திற்காக ஒன்றினைத்து தேசியத் தலைவர் கூட்டமைப்பை அமைத்தார். இந்த நிலையில் தமிழர்களி ற்கான தீர்வு விடயத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் எட்டப்பட்ட தீர்மா னத்தை நோக்கி தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நகர்த்துவதற்கான முயற்சி களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.