Breaking News

எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு தீவிரமாகச் செயற்படுமென - மாவை!

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பல மான அணியாக செயற்படுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாரா ளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா விவரிப்பு.

ஆரம்பமாகவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவது மற்றும் ஆளணிகள் தொடர்பில் தமிழ்த்தே சிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி களுக்கிடையில் நேற்றைய தினம் மாலை 3 மணிமுதல் இரவு 9 மணி வரை சுமார் 5 மணித்தியாலங்களாக கலந்துரையாடல் நீடித்துள்ளது. தமிழ ரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் துரைராஜசிங்கம் மற்றும் ரெலோ கட்சியின் நா.ஸ்ரீகாந்தா, வினோநோதாரலிங்கம், விந்தன் கனகரட்ணம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா, உட்பட பலர் கலந்துள்ளனர்.

இக் கலந்துரையாடலில் கருத்து வழங்கிய மாவை சேனாதிராசா, "தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முன்வைக்கப்பட்ட கருத்து க்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளன. 

அதனடிப்படையில், 80 சதவீதமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நடை பெறவுள்ள தேர்தலில் 3 கட்சிகளிற்குள்ளும் போட்டியிடவுள்ள வேட்பாள ர்களை ஒன்றுபட்டு திரட்டுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவு ள்ளன. 

இன்னும் ஓரிரு விடயங்கள் ஆராயப்பட வேண்டியிருப்பதனால், அந்த விடய ங்களையும் தீர்மானித்த பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டி னை பகிரங்கமாக தெரிவிப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, "ஜனநாயக போராளிகள் கட்சி உட்பட எம்முடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ள ஏனைய இயக்கங்களுடனும் கலந்துரையாட வேண்டிய தேவையுள்ளது. 

அவர்களுடனும் கலந்துரையாடிய பின்னர் எதிர்வரும் 05ஆம் திகதி இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும். முக்கியமாக பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதி நிதித்துவம் பூரணப்படுத்தப்பட வேண்டியிருப்பதனால், மூன்று கட்சி சார்ந்த உறுப்பினர்களும் உரிய கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கை களை முன்னெடுப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.