வெகுவிரைவில் இருளில் மூழ்கவுள்ள இலங்கை; காரணம் மின்வெட்டு!
ஸ்ரீலங்கா முழுவதிலும் எதிர்வரும் சில தினங்களில் மின்வெட்டு அமுல்ப டுத்தப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் வேலை நிறு த்தப் போராட்டமொன்றை நடத்துவ தற்கு இலங்கை மின்சார சபை தொழி ற்சங்கம் தீர்மானித்துள்ளதால் இந்த நிலை ஏற்படவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக கரு மங்கள் என்பன பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது.
நிலுவைக் கொடுப்ப னவுகள் மற்றும் வரப்பிரசாத கொடுப்பனவுகள் என்பன இரத்துச் செய்யப்பட்டு ள்ளதை எதிர்த்தே இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த தீர்மானி த்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்ஜித் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பிலுள்ள மின்சார சபை தலைமையகத்திற்கு முன்பாக ஊழியர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் 9ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமையும் தொடர்கின்றது.
பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உரிய தீர்வை பெற்றுத்தர தவறினால் வெகு விரைவில் தாமதமின்றி வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ரஞ்ஜித் ஜயலால் மேலும் தெரிவித்துள்ளார்.