"நான் இறப்பதற்கு முன்னர் மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுக் கொடுத்து விட்டே இறப்பேன்"

ஊடகங்களிற்கு ஆனந்தசங்கரி கருத்து தெரிவிக்கையில்,
"எமது கூட்டணியானது இம்முறை களமிறங்குவது தொடர்பில் மக்கள் மத்தி யில் ஒரு வரவேற்பு உள்ளது கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எம்மால் பெற்றுக் கொடுக்கக் கூடிய நிலையில் இருந்த தீர்வுகளை விடுதலைப் புலிகள் கூட ஏற்றுக் கொண்ட நிலையில் சிலர் தமது அரசியல் அபிலாசைகளுக்காக துரோகத்தனமான வேலைகளைச் செய்திருந்தனர்.
அவர்களைப் போல் கதிரைக்காக அடிபடுபவர்கள் அல்ல துரோக வேலைகளை நாமும் செய்திருந்தால் நாம் இப்பொழுதும் கதிரையிலையே இருந்திருப்போம் எனக்கு நன்றாக வயது சென்று விட்டது நான் இறப்பதற்கு முன்னர் எனக்கு நடந்த துரோகங்களுக்குச் சவாலாக எமது மக்களுக்கு சிறந்த தீர்வொன்றை பெற்றுக் கொடுத்து விட்டே இறப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.