Breaking News

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18 ஆவது ஆண்டு நினைவலைகளில்!

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிக ழ்வு இன்று (05.01.2018) வெள்ளிக்கி ழமை முற்பகல் 11 மணியளவில் தமி ழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலமையகத்தில் நடைபெற்றது. யாழ் மாநகர துணை முதல்வர் வேட்பாளர் ஆ.தீபன்திலீசன் தலைமையில் நடை பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் அக வணக்கத்தையடுத்து மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப் படத்துக்கு அவரது புதல்வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலை ருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர்மாலை அணிவித்தார்.

அதனையடுத்து சுடரஞ்சலி மற்றும் மலரஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது நினைவேந்தல் உரையினை ஆற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்..... 
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக பலம்பெற்றிருந்த சூழலில் சமா தான உடன்படிக்கை கிடைக்குமென்ற நிலையில் குமார் பொன்னம்பலம் உயி ரோடு இருந்தால் அவர் தான் தமிழர்களின் ஜனநாயக அரசியல் அணிக்கு தலைமை ஏற்பார் என்ற நிலையும் இருந்தது.

அது விடுதலைப் புலிகளின் 30 வருட கால அரசியல் கோரிக்கையை ஒரு பய ங்கரவாதக் கோரிக்கையாக சித்தரிக்க முடியாமல் போய்விடும், புலிகளையும் மக்களையும் பிரிக்க முடியாமல் போகும், விடுதலைப் புலிகளை ஓரங்கட்டி கைக்கூலிகளை தங்களுடைய தலமைகளாக கொண்டுவர முடியாமல் போகு மென்ற ஒரு சூழலில் தான் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்ட தாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.