Breaking News

தமிழர் நிலத்தில் தமிழரை அவமதிக்கும் போக்கு - சீமான் ஆதங்கம்.!

புத்தக வெளியீட்டு விழா நிகழ்வொ ன்றில் கலந்துகொண்ட காஞ்சி சங்கர மடத்தை சேர்ந்த இளைய சங்கரா ச்சாரி விஜயேந்திரன், நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலு த்தாமல் அமர்ந்திருந்தது தமிழக அர சியல் தளத்தில் பலத்த அதிர்வலை களைத் தூண்டியுள்ளது. 

சங்கராச்சாரியின் இத்தகைய செயலை கண்டித்து கடுமையான கண்டனத்தை வெளியிட்டுவருகின்றனர் தமிழக அரசியல் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்க ளும். இந்நிலையில், சங்கராச்சாரி விஜயேந்திரர் செயலை கண்டித்து அறி க்கை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பா ளர் சீமான். 

அதில், "பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நடத்திய ‘தமிழ் – சமஸ்கி ருதம் அகராதி’ வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்ட போது காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நின்று மரியாதை செலுத்தாது அமர்ந்திருந்தது கடும் கண்டனத்திற்குரியது. ஒட்டு மொத்தத் தமிழர்களின் உணர்வையும் இந்த அவமரியாதை பெரிதும் காயப்ப டுத்தியிருக்கிறது. 

இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது." எனவும், "தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என்று சிறு பிள்ளைத்தனமாகக் கூறும் காரணங்களை ஏற்க முடியாது. 

தமிழன்னையைத் தொழுகிற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படுகிறபோது அதற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது தமிழர் நிலத்தில் தொன்று தொட்டுக் கடைப்பிடிக்கப்படும் மரபு." "நாட்டுப்பண் ஒலித்தபோது எழுந்து நின்று மரியாதை செலுத்த தெரிந்த விஜயேந்திரருக்கு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என்ற மாண்பு தெரியாதா? 

உருவாகி சில ஆண்டுகளேயான இந்திய தேசியகீதத்திற்கு மேலான மதிப்புப் பல்லாயிரமாண்டுகளுக்கு முன் தோன்றிய மொழியைத் தொழும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உண்டென்று தெரியாதா?" 

எனவும், "எங்கள் குல மூதாதை ஆண்டாளுக்காகத் தாங்கள் இறங்கி போரா ட்டம் நடத்திய பெருமக்கள் அந்த ஆண்டாளின் தாயான தமிழே அவமதிக்க ப்பட்டிருக்கிறபோது கள்ளமௌனம் சாதிப்பது விந்தையாக இருக்கிறது. 

தன் தவறை உணர்ந்து மன்னிப்புகேட்பதென்பது மனித மாண்பு அது மகான்க ளுக்கு இல்லையா?. எங்கள் தாய்த்தமிழை அவமதித்த இந்நிகழ்விற்காக விஜயேந்திரர் மனம் வருந்தி உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும்." எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.