கோட்டா கைது தொடர்பில் நீதி மன்றத்தின் தீர்ப்பு இழுத்தடிப்பு !
பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு எதிர்வ ரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை இழுத்தடிக்கப்பட்டுள்ளது. கோட்டபாய ராஜபக்ஷவின் தந்தை டீ. ஏ ராஜபக்ஷவிற்கு நினைவிடம் அமை ப்பதற்கும், நினைவு காட்சியகம் ஒன்றை அமைப்பதற்கும் அரச நிதியை பய ன்படுத்தியதாக தெரிவித்து குற்றவியல் விசாரணை பிரிவு கோட்டபாய ராஜ பக்ஷவிற்கு எதிராக நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்தது.
இக் குற்றச்சாட்டை எதிர்த்து கோட்டபாய ராஜபக்ஷவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
கோட்டபாய தாக்கல் செய்த மனு விற்கமைய எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரகசிய காவல் துறையினருக்கு இன்று வரை மேன்முறையீட்டு நீதிமன்றினால் தடைவிதி க்கப்பட்டிருந்தது.
இவ்வாறு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்ததடையுத்தரவு தொடர்ந்து நீடிப்பதா? நிராகரிப்பதா? தொடர்பிலான மீள் விசாரணை இன்று மேன்முறை யீட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இன்று நடைபெற்ற மீள் விசாரணையின் போதே குறித்த இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிப்புச் செய்யப்பட்டுள்ளது.