திருடர்கள் என அறிந்தும் குற்றவாளிகளை காப்பாற்றும் ஜனாதிபதி
மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் பிரதான கள்ளர்கள் இன்று மக்கள் மத்தி யில் விசேட அறிவித்தல்களை விடுத்து வருகின்றனர். பயமறியாத பிர தமர் என்பது உண்மையெனில் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக பதவி துறக்க வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச விவரித்துள்ளார்.
ஜனாதிபதியினால் மிஷன்களை ஆர ம்பிக்க மட்டுமே முடியும். மாறாக அவரால் குற்றவாளிகளை தண்டிக்க முடியாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவும் தனது பங்கிற்கு மிஷன் 2யை ஆரம்பித்துள்ளாராம். கட்டம் கட்டமாக மிஷன்களை ஆரம்பித்து எந்தப்பயனும் இல்லை.
கள்ளர் யாரென்று தெரிந்துள்ளது என்றால் அவர்களின் ஊழல் மோசடிகள் அகப்பட்டுள்ளது என்றால் உடனடியாக குற்றப்புலனாய்வு துறைக்கு அறிவிக்க வேண்டும். அதேபோல் நீதிமன்றத்தின் மூலமாக அடுத்தகட்ட நடவடிக்கை களை முன்னெடுக்க வேண்டும்.
அதை விடுத்து குற்றவாளிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளை எடுப்பது வேடிக்கையான விடயமாகும். இவர்கள் அனைவரும் தமது அரசியல் நாட கத்தை நிறுத்த வேண்டும். மக்களை ஏமாற்றி தமது ஆட்சியினை தக்க வைக்கும் நகர்வுகளே இவர்களின் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருகி ன்றது.
ஜனாதிபதி ஒருபோதும் குற்றவாளிகளை காப்பற்றப்போவதில்லை. ஜனாதிப தியின் செயற்பாடுகளும் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கத்திலேயே உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
நிகழ்கால அரசியல் விவகாரங்கள் குறித்து கரு த்து வினாவியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.