கூட்டமைப்பு வேட்பாளருக்கு எதிராக முறைப்பாடு - அனந்தி சசிதரன் !
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து ள்ளார்.
கூட்டமைப்பின் சார்பில் வலிகாம் தென் மேற்கு பிரதேச சபையில் 4 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பா ளர் ஒருவருக்கு எதிராகவே வட்டு க்கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். மேற்படி வேட்பாளர் முகநூலில் தன்னை விமர்சித்தாக குற்றஞ்சாட்டியே அவருக்கு எதிராக நேற்று முன்தினம் (23) செவ்வாய்க் கிழமை இவ் முறைப்பாட்டை தொடுத்து ள்ளார். இவ் முறைப்பாட்டையடுத்து குறித்த வேட்பாளர் சமரசம் செய்வதற்கு முயற்சித்த போதும் அதனை அமைச்சர் நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்ப டுகின்றது.
இதேவேளை அமைச்சர் அனந்தி சசிதரனும் குறித்த வேட்பாளரும் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டு ள்ளது.