பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படாமையை வினவிய ஐரோப்பிய ஒன்றியம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்து அதற்குப் பதிலாக சர்வதேச சட்டத்திட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு ஏற்ப புதிய சட்டமொன்றை இயற்று வதாக இலங்கை பிரதமர் உட்பட இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்தி னால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இதுவரை நிறைவேற்றப்படாதது குறி த்து இரண்டு மாதங்களுக்கு முன்னரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழுவொன்று கவலை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையிலேயே இந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற இலங்கை – ஐரோ ப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுக் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்ப ட்டுள்ள கூட்டறிக்கையிலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்று விரைவில் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
தடுப்பிலுள்ள சந்தேக நபர்கள் மற்றும் கைதிகள் கொடூரமான சித்திரவதை களுக்கு உட்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவரும் சர்வதேச உடன்படி க்கையில் இலங்கை அரசாங்கம் கை ச்சாத்திட்ட போதிலும் இலங்கை இரா ணுவம் உட்பட அரச படையினர் தொடர்ச்சியாக சித்திரவதைகளில் ஈடுபட்டு வருவது தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றியம் தனது கண்டனத்தை தெரியப்படுத்தி யிருக்கின்றது.
சித்திரவதைகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்வதில்லை என்ற கொள்கை யை நடைமுறைப்படுத்துவதற்கும் – சித்திரவதைகளில் ஈடுபடுவோரை சட்ட த்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கும் இலங்கை அரசா ங்கத்தை இணங்க வைத்துள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேவேளை போர்க் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்தி பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்து வதற்குத் தேவையான கட்டமைப்புக்களை தாமதமின்றி உருவாக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.