Breaking News

ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை அலட்சியப்டுத்தும் ஸ்ரீலங்கா அரசு!

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் பரிந்துரை களை நடைமுறைப்படுத்துவதில் கூட ஸ்ரீலங்கா ஜனாதிபதியும் – பிரதமரும் அக்கறை காண்பிப்பதில்லை என சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஹியூமன் ரைட்ஸ் வொச் என்ற மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவே கம தலைமையிலான மக்களின் கரு த்துக்களை அறிவதற்கான விசேட செயலணியின் பரிந்துரைகளையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளது ஏமாற்றத்தை ஏற்படு த்தியுள்ளதாக கடும் ஆத்திரமடைந்துள்ளது. அமெரிக்காவின் நிவ்யோர்க் நக ரைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் சர்வதேச மனித உரிமைகள் கண்கா ணிப்பகம் 2017 ஆம் ஆண்டில் மனித உரிமைகளைப் பாதுகாக்க உலக நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான தனது ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது. 

பொறுப்புக்கூறல், மீள் நிகழாமை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படு த்துவதற்கான கட்டமைப்புக்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிவ தற்காக கலாநிதி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அட ங்கிய விசேட செயலணி தனது அறிக்கையில் முன்வைத்திருந்த பரிந்துரை களை ஸ்ரீலங்கா அரசு உதாசீனம் செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. 

முத்தெட்டுவேகம செயலணியின் அறிக்கை கையளிக்கும் நிகழ்வை ஸ்ரீல ங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் புறக்கணித்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்கவே பொறுப்பேற்றிருந்தார். 

இதற்கமைய 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் வைத்து கையளி க்கப்பட்ட முத்தெட்டுவேகம தலைமையிலான விசேட செயலணியின் பரிந்து ரைகள் அடங்கிய அறிக்கையை ஸ்ரீலங்கா அரசாங்கம் கிடப்பில் போட்டு அதனை முற்றிலும் மறக்கடிக்கச் செய்துள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

போர்க் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்படவுள்ள விசேட நீதிமன்றக் கட்டமைப்பிற்கு வெளிநாட்டு நீதிபதிக ளின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரைகளை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் பகிரங்கமாகவே நிராகரித்துள்ளனர்.

இவ் விடயத்தை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரும் பல தடவைகள் பகிரங்கமாக உறுதிப்படுத்தியதுடன் போரை முடிவுக்கு கொண்டு வந்த படைவீரர்களை தண்டிக்க அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றும் சூளுரைத்துள்ளனர். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இணைந்து நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அமைய உண்மை, நல்லிணக்கம், மீள் நிகழமை மற்றும் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடூரங்களுக்கான நீதியை நிலைநாட்டும் பொறுப்புககூறலை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை ஸ்ரீலங்கா அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றாமை குறித்தும் மனித உரிமை கள் கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது. 

அதேவேளை மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய முக்கியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளாமை தொடர்பி லும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் வெளியிட்டுள்ளது. 

அது மாத்திரமன்றி பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலான பிரச்சனைகளை அணுகுவதற்காக அமைப்பதாக ஸ்ரீலங்கா அரசு உறுதியளித்த காணாமல்போனோர் அலுவலகத்தை இன்னமும் நிறு வாமை குறித்தும் விசனம் வெளியிட்டுள்ளது. 

அதேவேளை நடைமுறையிலுள்ள மிகவும் கொடூரமான சட்டமான பயங்கர வாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழித்து சர்வதேச சட்டத் திட்டங்களுக்கு அமைய புதிய சட்டமொன்றை உருவாக்குவது, சித்திரவதைகள் மற்றும் பாலி யல் வன்கொடுமைகளுடன் தொடர்புடைய ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட அரச படையினர் பொலிசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்காததையும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோடிகாட்டியுள்ளது. 

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் உறினர்களால் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட வர்களின் பட்டியலை வெளியிடுவதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியையும் இன்னமும் நிறைவேற்றாததையும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

அதேவேளை சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற துரிதமாகவும் பயனுள்ளதாகவும் செயற்படுமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வைத்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன் வலியுறுத்தியதையும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் நினைவூட்டியுள்ளது.