முன்னாள் போராளியான புலிமறவன் மாஸ்ரர் மரணம் - THAMILKINGDOM முன்னாள் போராளியான புலிமறவன் மாஸ்ரர் மரணம் - THAMILKINGDOM

  • Latest News

    முன்னாள் போராளியான புலிமறவன் மாஸ்ரர் மரணம்

    முன்னாள் போராளியும் விடுதலைப்புலிகளின்
    சமாதான செயலக பொறுப்பாளராகவிருந்த புலித்தேவன் அவர்களின் சகோதரருமான புலிமறவன் மாஸ்ரர் அவர்கள் இன்று மாரடைப்பால் வடமராட்சியில் மரணமடைந்துள்ளார்.

    விடுதலைப்புலிகள் ஆளயுதங்களை மௌனித்தபோது இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டபோதும் தொடர்ந்தும் புலனாய்வுத் துறையின் தீவிர கண்காணிப்பில் இருந்து தனது ஆசிரியப்பணியை ஆற்றிவந்த புலிமறவன் மாஸ்ரர் அவர்கள் இன்று மாரடைப்பின் காரணமாக இறந்துள்ளார்.

    புனர்வாழ்வின் பின்னர் பளை மத்தியகல்லூரியிலும் பின்னர் வடமராட்சி தும்பளை சைவப்பிரகாச வித்தியாலயத்திலும் ஆசிரியராகவும் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: முன்னாள் போராளியான புலிமறவன் மாஸ்ரர் மரணம் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top