Breaking News

சிஎஸ்கேவை விட்டு பிரிந்ததில் வருத்தமே - கவலையில் அஷ்வின்.!

கோடை விடுமுறைகளில் ஆண்டு தோறும் நடைபெறக்கூடிய ஐபிஎல் போட்டிகள் இந்த வருடமும் நடை பெறவுள்ளது. இப்போட்டித்தொடரில் இரு ஆண்டுகள் பங்கேற்க சென்னை அணிக்கு தடை விதிக்கபட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த தடை நீங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தோனி தலைமையிலான சென்னை அணி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டி துவங்கியது முதல் பெரும்பான்மையான போட்டிகளில் சென்னை அணி சார்பாக விளையாடி வந்த தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், இந்த ஆண்டு பஞ்சாப் அணி சார்பாக விளையாட ஒப்பந்தம் செய்ய ப்பட்டுள்ளார். 

இந்நிலையில், சென்னை அணியை விட்டுப்பிரிவது குறித்து வருத்தம் தெரி வித்துள்ளார் அஷ்வின். "எனது சொந்த அணியை பிரிவது வருத்தமாக உள்ளது. ஆனால், வரும் காலங்களில் சென்னை அணியில் விளையாடுவேன் என நம்பிக்கையுள்ளது. பஞ்சாப் அணியின் கேப்டன் பதவி குறித்து யாரும் என்னிடம் பேசவில்லை" என தெரிவித்துள்ளார்.