வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றியீட்டும் - இரா. சம்பந்தன்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தமிழர் தாய கப் பகுதிகளான வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றன.
இத் தேர்தலில் எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட அனைத்து அரசி யல் பிரமுகர்களும் வாக்களிப்பு நடவ டிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஸ்ரீல ங்காவின் 2018 ஆம் ஆண்டுக்கான உள்ளளூராட்சி மன்றத் தேர்தலு க்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் மிகவும் அமைதி யான முறையில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. தமிழர் தாயகப் பகுதி களான வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட அனைத்து அரசியல் பிரமுகர்களும் வாக்களிப்பு நடவடி க்கையில் ஈடுபட்டிருந்தமை தகவல் மையங்களில் பதிவாகியுள்ளது.
அந்த வகையில் திருகோணமலை புனித மரியாள் மகளிர் வித்தியாலயத்தில் இன்று காலை எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் வாக்களித்தார்.
வாக்களி த்ததன் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் வடக்கு கிழ க்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறுமென நம்பிக்கை வெளியி ட்டார்.
இதேவேளை யாழ் மாவட்டத்தில் கொல்லங்கலட்டி சைவ தமிழ் வித்தியா சாலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வாக்களித்திருந்தார்.
குடத்தனை அரசினர் தமிழ் பாடசாலையில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் வாக்களித்திருந்தார்.
யாழ் புனித ஜேம்ஸ் மகளீர் பாடசாலையில்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்களித்திருந்தார்.
இதேவேளை கட்டபிராய் கலைமணி சனசமூக நிலையத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் வாக்களித்திருந்தார்.
நாவலர் கலாசார மண்டபத்தில் இன்று காலை ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வாக்களி த்திருந்தார்.
அத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் யாழ் அளவெட்டி சீனங்கலட்டி பாடசாலையில் வாக்களித்திரு ந்தார்.
இதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய பொருளாதார பிரதியமை ச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தனது வாக்கினை ஓட்டமாவடி தேசிய பாடசா லையில் பதிவு செய்தார்.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தனது வாக்கினை வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்திலும் பதிவிட்டார்.
மட்டக்களப்பு சிசிலியா மகளீர் பாடசாலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாயத்துறை அமைச்ச ருமான துரைராஜசிங்கமும் வாக்குகளை பதிவு செய்தார்.
அம்பாறை – அக்கரைப்பற்று அட்டாளைச்சேனையிலுள்ள ஆறாம் குறிச்சி சன சமூகக் கட்டிடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் சென்று தமது வாக்கைச் செலுத்தினார்.
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தனது வாக்கை அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் பதி விட்டார்.
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல். எம்.அதாஉல்லா அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மஹா வித்தியாலயத்தில் தனது வாக்கைச் செலுத்தினார்
இதைப்போலவே மலையகத்திலும் அரசியல் தலைவர்கள் தமது வாக்கினை பதிவிட்டமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரு மான ஆறுமுகன் தொண்டமான் தனது வாக்கை இறம்பொடை வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் பதிவு செய்தார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்ச ருமான வே.இராதாகிருஷ்ணன், மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜராம் ஆகிய இருவரும், நுவரெலியாவில் உள்ள நல்லாயினபற்று மக ளிர் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் வாக்கினை அளித்துள்ள னர்.
வட்டகொட கலாபவன் தமிழ் மகா வித்தியாலயத்தில் தோட்ட உட்கட்டமை ப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் பழனிசாமி திகாம்பரம் வாக்களித்திரு ந்தார்.
உள்ளுராட்சிமன்ற தேர்தலானது அமைதியான முறையில் பொலிஸாரின் பாதுகாப்புடன் நடைபெற்றது.