ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெறும் - ரணில்.........!
ஸ்ரீலங்காவின் 2018 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் மிகவும் அமைதியான முறையில் இன்று சனி க்கிழமை நடந்தேறி முடிந்தது.
இத் தேர்தலில் ஒரு கோடி 57 லட்சத்து 60 ஆயிரத்து 867 பேர்வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அதேவேளை, நாட ளாவிய ரீதியில் 14 ஆயிரத்து 374 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்க ப்பட்டிருந்தன. மேலும் வாக்களிப்பு நடவடிக்கையில் ஸ்ரீலங்காவின் ஜனா திபதி பிரதமர் உள்ளிட்ட அனைத்து அரசியல் பிரமுகர்களும் ஈடுபட்டனர்.
அந்த வகையில் பொலன்னறு வையி லுள்ள வித்யாலோக்க விகாரையில் உள்ள வாக்களிப்பு மத்திய நிலையத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்களித்துள்ளார்.
வாக்களித்ததன் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி பாலசிறினே அமைதியான முறையில் தேர்தலை நடத்தும் வகை யில் புதிய தேர்தல் முறையை அமுல்படுத்தியதை எண்ணி தான் மகிழ்ச்சி யடைவதாக தெரிவித்தார்.
அமைதியான முறையில் தேர்தலை நடத்தும் வகையில் புதிய தேர்தல் முறையை அமுல்படுத்தியதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன். அத்தோடு அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரே நாளில் இன்று தேர்தல் நடைபெறுகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.
49 ஆண்டுகளுக்கு பின்னர் தொகுதிவாரி தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு விகி தாசார முறையிலான கலப்பு முறை தேர்தல் இம்முறை நடைபெற்று வரு கிறது. இதன்மூலம் வன்முறைகள் குறைக்கப்பட்டு மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடவடிக்கைகள் நடைபெற்றன.
இவ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியுடனும் அச்ச மின்றி யாருடைய தலையீடுமின்றி வாக்களிப்பதற்கு மக்களுக்கு நீண்ட நாட்க ளுக்கு பின்னர் வாய்ப்பு கிடைத்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெற்றியின் பின்னர் அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மக்களின் மும்முரமான வாக்களிப்பின் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும் என்று எதிர்பார்க்கின்றேன்” எனத் தெரிவித்தார்.
இதேவேளை ஸ்ரீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்து ள்ளார்.
வாக்களித்ததன் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு நகரிலும் ஏனைய பகுதிகளிலும் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெறும் என தான் எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தார்.
புதிய தேர்தல் முறையினை அமுல்படுத்தியுள்ளோம். இந்த தேர்தல் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது. 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலையும் இவ்வாறே அமைதியான முறையில் முன்னெடுத்தோம்.
தமது பிரதேசத்தில் உள்ள வேட்பாளருக்கு வாக்களித்த மக்களுக்கு அவர்க ளிடம் கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. பெண் வேட்பாளர்களும் இந்த தேர்த லில் அதிகமாக பங்கேற்றுள்ளனர்.
இவை புதிய தேர்தல் முறையினால் கிடைத்த நன்மைகள் ஆகும். அமைதி யான மற்றும் சமாதானமாக இந்த தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையாள ருக்கும் வாக்களித்த மக்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இத் தேர்தலில் கொழும்பு நகரிலும் ஏனைய பகுதிகளிலும் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெறும் என எதிர்ப்பார்க்கின்றேன். என தெரிவித்தார். அத்தோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரது பாரியார் மைத்திரி நாடாளுமன்ற உறுப்பி னர் முஜீபுல் ரஹ்மான் மற்றும் ரோசி சேனநாயக்க ஆகியோரும் வாக்க ளித்திருந்தனர்.