Breaking News

கூட்டு எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை.!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை ஒப்படைக்கு மாறு ஜனாதிபதி அல்லது வெளிவிவகார அமைச்சர் 24 மணி நேரத்திற்குள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுக்க வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம்.பெரேரா நிலைய த்தில் நடைபெற்றது. அவ்வெதிர்க்க ட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப் பெரும கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அறிக்கை விடுத்துள்ளார். மத்திய வங்கி பிணை முறிமோசடி இடம்பெற்று இன்று மூன்று வருடங்களாகின்றன. நாடு சுதந்திரமடைந்த பின்னர் அரசாங்க அனுசரனையிலான பாரிய மோசடியாக அது உள்ளது. எனி னும் குறித்த மோசடியின் பிரதான சூத்திரதாரியான மத்திய வங்கியின் முன்னாள் அளுநர் அர்ஜுன மகேந்திரனை கண்டு பிடிக்க முடியவில்லை யென இரகசிய பொலிஸார் நீதி மன்றிற்குத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

சிங்கப்பூரில் வசித்த வீட்டில் அவர் தற்போது இல்லை எனவும் இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகேந்திரனை கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. குறித்த திகதியில் அவர் ஆஜராகாமையினால் மீண்டும் மார்ச் மாதம் எட்டாம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 

எனினும் அவர் வீட்டில் இல்லாததனால் சித்தாரிசு வழங்குவதற்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆகவே இராஜதந்திர ரீதியில் தீர்க்க வேண்டிய பிரச்சினையாக இது தற்போது உருவெ டுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.