32 மில்லியன் ரூபா நிதி விடயத்தில் அனந்தி மீது சி.வி.கே குற்றச்சாட்டு! - THAMILKINGDOM 32 மில்லியன் ரூபா நிதி விடயத்தில் அனந்தி மீது சி.வி.கே குற்றச்சாட்டு! - THAMILKINGDOM
 • Latest News

  32 மில்லியன் ரூபா நிதி விடயத்தில் அனந்தி மீது சி.வி.கே குற்றச்சாட்டு!

  ஆளுநர் செயயலக பொது வைப்புக் கணக்கு மற்றும் ஆளுநர் சுயேட்சை நித்தியத்திலிருந்து கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்துக்கு கிடைத்த 32 மில்லியன் ரூபா நிதி மாகாண சபையின் அங்கீகாரம் பெறாது செலவு செய்ய ப்பட்டுள்ளது.

  வடக்கு மாகாண கூட்டுறவு அமை ச்சர் ஆனந்தி சசிதரனும் அவரது அமைச்சின் கீழுள்ள அதிகாரிக ளுமே இதற்கு பொறுப்பு என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

  வடக்கு மாகாண சபை அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் அவைத் தலைவர் அறிவித்தல்களை அறிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

  மேலும் தெரிவிக்கையில்....

  ஆளுநர் செயயலக பொது வைப்புக் கணக்கு மற்றும் ஆளுநர் சுயேச்சை நிதி யத்திலிருந்து கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்துக்கு கிடைத்த 32 மில்லி யன் ரூபா நிதி மாகாண சபையின் அங்கீகாரம் பெறாமல் செலவு செய்யப்பட்டு ள்ளது. 

  இந்தச் செலவீனத்துக்கு மாகாண சபை பொறுப்பேற்காது. அதற்கான அங்கீகா ரத்தையும் வழங்க முடியாது. இது தொடர்பில் கணக்காய்வு திணைக்களம் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமெனத் தெரிவித்தார். 

  கடந்த காலங்களில் ஆளுநர் நிதியத்தின் ஊடாக அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளுவதற்கு 144 மில்லியன் ரூபா வரையில் கூட்டுறவுத் திணைக்க ளம் உட்பட பல்வேறு திணைக்களங்களில் நிதி பெறப்பட்டது. அந்த நிதி முறைமை தவறானது என பல்வேறு தரப்பினராலும் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டப்பட்டது. 

  அதைக்கருத்தில் கொண்டு மக்களின் நன்மை கருதி கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்திடம் இருந்து பெறப்பட்ட நிதியை ஈடுசெய்வதற்கு ஆளுநர் செயலக பொது வைப்புக் கணக்கு மற்றும் ஆளுநர் சுயேச்சை நிதியத்திலி ருந்து 32 மில்லியன் ரூபா அண்மையில் விடுவிக்கப்பட்டது. 

  இந் நிதியியை மாகாண கூட்டுறவு திணைக்களத்தால் பரிந்துரைகள்மூலம் 21 கூட்டுறவு சங்கங்களின் கிராமிய வங்கிகள் மூலம் மக்கள் பயன்படும் வகை யில் வகையில் பயப்படுத்துவதற்கு 54 ஆவது அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. 

  பயனாளிகள் தெரிவு செய்யப்படும் போது கூட்டுறவு சங்கங்களின் உறுப்பி னர்களாகவும், போரால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களா கவும் இருக்க வேண்டுமென அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டி ருந்தது. நிதி கையாளப்பட்டபோது சபையின் அங்கீகாரம் பெறப்படவில்லை. இந்த நிதிக்கு மாகாண சபை அங்கீகாரம் வழங்காது. பொறுப்பும் ஏற்காதென அவைத்தலைவர் தெரிவித்துள்ளார். 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: 32 மில்லியன் ரூபா நிதி விடயத்தில் அனந்தி மீது சி.வி.கே குற்றச்சாட்டு! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top