முல்லைத்தீவில் தேர்தல் கடமை நேரத்தில் வாகனம் விபத்து!!
முல்லைத்தீவில் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுக்கொண்டிருக்கை யில் மாவட்டச் செயலக வாகனம் ஒன்று இன்று அதிகாலை விபத்தில் சிக்கி யுள்ளது.
இவ் விபத்து இன்று அதிகாலை முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் நந்திக்கடலுக்கு அண்மையாக மூன்றாம் கட்டை பகுதியில் இடம்பெ ற்றுள்ளது. இதில் தேர்தல் கடமைக ளில் ஈடுபட்ட தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் இரண்டு பொலிஸார் படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளனர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.