Breaking News

“பெண் பிரதி நிதித்துவத்துக்கு மறுத்தால் பெரும் விளைவு”

உள்ளூராட்சி மன்றங்களுக்கு வெற்றியீட்டிய கட்சிகளின் பிரதி நிதிகளைத் தேர்த்தெடுக்கையில்  25 சதவீத பெண் பிரதி நிதித்துவத்தைப் புறந்தள்ளிவிட்டு செயற்பட முற்பட்டால் கடுமையான விளைவுகளை எதிர்நோக்க நேரிடுமென மார்ச் 12 அமைப்பு எச்சரித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளன. இந்நிலை யில் இன்று (20) கொழும்பு சனசமூக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவ்வ மைப்பு மேற்கண்டவாறு தெரிவித்து ள்ளது. மார்ச் 12 அமைப்பின் பேச்சாளர் மஞ்சுல கஜநாயக்க உரையாற்று கையில் தெரிவிக்கையில்....

“340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையாடல்கள் சகல கட்சிகளிலும் இடம்பெற்று வருகி ன்றன. ஆனால் கட்சிகள் தெரிவு செய்யும் தலைவர்கள் சரியான பாதையில் சிந்திப்பவர்களா என்பதை கட்சிகள் சிந்திக்க வேண்டும்.

“இத்தேர்தலில் பிரதான அம்சம் பெண்களுக்கான அரசியல் உரிமையை பெற்றுத்தருவதே! 25 வீத பெண் பிரதிநிதிகளை உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்வது கட்டாயப்படுத்தப்பட்டது. ஆனால் அதில் கட்சிகள் கவனம் செலுத்தவில்லை.

“மேலும் தேர்தல் முறை தொடர்பாக தேர்தலுக்கு முன்னர் விமர்சிக்காத சிலர் தற்போது தேர்தல் முறைமை தொடர்பில் வன்மையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் இத்தேர்தல் முறையே மக்களுக்கான சிறந்த தலைவர்களைப் பெற்றுத் தந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.