Breaking News

"சர்­வ­தே­சமே" உற­வு­க­ளுடன் இணையும் வரை போராட்டம் தொடரும் - கிளிநொச்சி.!

கிளி­நொச்­சியில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் போராட்­ட த்தை ஆரம்­பித்து ஒரு வரு­டத்தை நிறைவு செய்­துள்ள நிலையில் 366 ஆவது நாளான நேற்று கிளி­நொச்சி கந்­த­சு­வாமி ஆலய முன்­றலில் கவ­ன­யீர்ப்பு போரா ட்­டத்­தினை முன்னெடுத்துள்ளனர். 

வடக்கு, கிழக்கில் எட்டு மாவட்­டங்­களைச் சேர்ந்த காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள், அமை ப்பின் பிர­தி­நி­தி­களும், சிவில் சமூக அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­களும், அர­சி­யல்­வா­திகள் மற்றும் மத­கு­ரு­மார்கள், தென்­னி­லங்கை அமைப்­புக்­களைச் சேர்ந்த பிர­தி­நி­திகள் எனப் பெரு­ம­ள­வானோர் இக் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தில் குதித்துள்ளனர். கிளி­நொச்சி கந்­த­சு­வாமி ஆலய முன்­றலில் காலை 9.30 மணிக்கு ஆரம்­பிக்­கப்­பட்ட போராட்டம் நண்­பகல் ஒரு மணி­வரை நீடித்திருந்தது. 

 போராட்­டத்தில் ஈடு­பட்ட மக்கள் குற்­றங்­களை மறைக்க சட்­டத்­தி­ருத்­தமா? 

சர்­வ­தே­சமே உள்­நாட்டு பொறி­மு­றையில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை, காணா மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அலு­வ­லகம் சர்­வ­தே­சத்­திற்­கான கண்­து­டைப்பு, சர்­வ­தே­சமே எங்­க­ளுக்கு நீதி வேண்டும், நீதி கேட்கும் எமக்கு நிவா­ரணம் எதற்கு? 

அடைக்­க­ல­மாக கொடுத்­த­வர்­களை அரசு காண­வில்லை என்பது எப்­படி நியா­ய ­மாகும்?

ஐ.நா.வே பன்­னாட்டு தலை­யீட்­டு­டனான நீதி பொறி­மு­றையே எமக்குத் தேவை போன்ற வாசகங்கள் எழு­தப்­பட்ட பதா­கைக­ளையும் ஏந்­தி­யவாறு இந்த கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தில் காணா­மற்­போன ஊட­க­வி­ய­லாளர் எக் ­னெலிகொட வின் மனைவி, காணா­மற்­போ­னோரை தேடி­ய­றியும் குழுவின் இணைப்­பாளர் சக்­திவேல் உட்­பட தென்­ப­கு­தியைச் சேர்ந்த பலரும் பங்­கேற்­றி­ருந்­தனர். 

தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் பிர­சார செய­லா­ளரும் கொழும்பு மாந­கர சபை உறுப்­பி­ன­ராக தெரி­வா­கி­யுள்­ள­வ­ரு­மான சி.பாஸ்­கரா உட்­பட பல அர­சி­யல்­வா­தி­களும் பங்­கேற்­றி­ருந்­தனர். 

மேலும் கருத்து தெரி­வித்த கிளி­நொச்சி காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வி­னர் ­களின் அமைப்­பினைச் சேர்ந்த கலா­ரஞ்­சனி, எங்­க­ளது போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்டு ஒரு வரு­டம் காலம் பூர்த்தியாகியுள்ள நிலையில் இது­வரை எவ்­வித தீர்வும் கிடைக்­க­வில்லை. 

நாட்டின் ஜனா­தி­ப­தியும் எங்கள் விட­யத்தில் கைவி­ரித்து விட்டார். நாங்கள் கேட்­பது எங்­க­ளது காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வி­னர்கள் இருக்­கின்­றார்­களா? இருக்­கின்­றார்கள் என்றால் எங்கு இருக்­கின்­றார்கள்? 

எப்­போது விடு­விக்­கப்­ப­டு­வார்கள்? 

அல்­லது காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வி­னர்கள் உயி­ரோடு இல்லை என்றால் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது? என்­ப­து­வே­யாகும். 

இதனைப் பொறுப்­புடன் கூற வேண்­டிய அரசு பொறுப்­பற்று நடந்­து­கொள்­கின்­றமை வருத்­த­ம­ளிக்­கி­றது. இலங்கை விடயம் தொடர்பில் ஐ.நா.வுக்கு இரண்டு வரு­ட­கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது. அதில் ஒரு வருடம் நிறை­வு­பெற்­றுள்ள நிலையில் இது­வ­ரைக்கும் நம்­பிக்கை தரும் வகையில் எதுவும் இடம்­பெ­ற­வில்லை. 

ஐ.நா.வுக்கு வழங்­கப்­பட்ட கால அவ­காசம் இலங்கை அரசை காப்­பாற்றும் ஒரு நட­வ­டிக்­கை­யே­யாகும். எங்­களை பொறுத்­த­வரை இந்த இரண்டு வரு­ட­கால அவ­காசம் என்­பது ஒரு பய­னற்ற நட­வ­டிக்­கை­யே­யாகும். தமிழ் அர­சியல் தரப்­புக்கள் தங்­களின் கட்சி பேதங்­களை கடந்து எங்­களின் பிரச்சினைகளுக்காக ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். 

அவ்வாறே சிவில் அமைப்பு பிரதி நிதிகளும் எங்களுக்காக கடந்த காலம் போன்று குரல் எழுப்ப வேண்டும். இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களின் இனப் படு கொலைக்கு சர்வதேசமும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. இருந்தும் தற்போ தைய நிலையில் எங்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு நம்பிக்கை சர்வதேசமே எனத் தெரிவித்துள்ளனர்.