Breaking News

உண்மையான அதிகாரப் பகிர்வு இன்றி உரித்துக்களை மீளப் பெற முடியாது – முதலமைச்சர்!

ஒருமுறையான சமஷ்டி அரசியல் யாப்பின் கீழ் உண்மையான அதிகாப் பகிர்வு பெற்றாலேயன்றி, பறி கொடு க்கப்பட்ட எமது உரித்துக்களை மீண்டு ம் பெற முடியாதென வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது குறித்த நிலைப்பாடு குறி த்து வினவிய போதே இவ்வாறு தெரி விக்கையில்  மேலும், “வெள்ளை யரிடம் இருந்து நாம் பெற்ற சுதந்திரம் இன்று பொருளற்றதாகப் போய்விட்டது. ஏனெனில் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டி ருந்த நாங்கள் இன்று பெரும்பான்மை இனத்தவரின் ஆட்சிக்கும் அதிகார த்திற்கும் உட்ப ட்டு விட்டோம். 

ஒரு முறையான சமஷ்டி அரசியல் யாப்பின் கீழ் உண்மையான அதிகாப் பகி ர்வு பெற்றாலேயே அன்றி நாம் எமது பறி கொடுக்கப்பட்ட உரித்துக்களை மீண்டும் பெற முடியாது. ஆகவே பெப்ரவரி 4ஆம் திகதியை எவ்வாறு தமி ழர்களாகிய நாங்கள் கொண்டாட முடியும்? 

இவ் விடயம் தொடர்பாக எனது இணைத்தலைவர்களுடன் பேசும் வாய்ப்பு என க்குக் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் என் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று திடமாக நம்புகின்றேன். காரணம் தமிழர்கள் அனை வரும் ஏமாற்றப்பட்டுள்ளோம், கைவிடப்பட்டுள்ளோம் என்றே நாம் திடமாக நம்புகின்றோம்” எனத் தெரிவித்தார்.