Breaking News

70 வது சுதந்திர தின வரவேற்பு விருந்து ரத்து - ஜனாதிபதியால்.!

இன்று கொண்டாடப்படும் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின வரவேற்பு விருந்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்துள்ளார். 

சுதந்திர தினத்தன்று பாரம்பரிய முறைப்படி, ஜனாதிபதியால் இரா ப்போசன வரவேற்பு விருந்து ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், உள்நாட்டு, வெளிநாட்டு பிர முகர்கள், இராஜதந்திரிகள் பங்கே ற்பது வழக்கம். இம்முறையும், இந்த விருந்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. சுமார் 600 விருந்தினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்ப ட்டது. எனினும், அழைப்பிதழ் அனுப்பப்பட்ட வெளிநாட்டு தூதுவர்கள், மற்றும் இரா ஜதந்திரிகள், பிரமுகர்களுக்கு இந்த விருந்துபசார நிகழ்வு தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சித் தேர்தலுக்கு இன்னமும் நான்கு நாட்களே இருப்பதால், பரப்பு ரைகள் தீவிரமடைந்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே, சுதந்திர தின இராப்போசன வரவேற்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜனாதி பதியின் உத்தரவை அடுத்தே இந்த நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டதாகவும் தெரி விக்கப்படுகிறது. 

இதற்கிடையே அழைப்பிதழ் கிடைத்த பலர், தமக்கு நிகழ்வு ரத்துச் செய்ய ப்பட்டமை தொடர்பான அறிவித்தல் கிடைக்கவில்லையென தெரிவிக்கப்ப ட்டுள்ளது.